/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனத்துக்குள் திருப்பூர் -10 திட்டம்; இலக்கை தாண்டியும் மரக்கன்றுகள் நடவு
/
வனத்துக்குள் திருப்பூர் -10 திட்டம்; இலக்கை தாண்டியும் மரக்கன்றுகள் நடவு
வனத்துக்குள் திருப்பூர் -10 திட்டம்; இலக்கை தாண்டியும் மரக்கன்றுகள் நடவு
வனத்துக்குள் திருப்பூர் -10 திட்டம்; இலக்கை தாண்டியும் மரக்கன்றுகள் நடவு
ADDED : பிப் 04, 2025 11:51 PM

உடுமலை; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், பள்ளி, கல்லுாரிகள், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் மரக்கன்றுகள், இலவசமாக நடப்பட்டு வருகிறது.
விவசாயிகள் அணுகினால், நிலத்தின் மண் தரம் ஆய்வு செய்து, அந்நிலத்தில் வளர்க்க ஏதுவான மரக்கன்றுகள் தேர்வு செய்து, இலவசமாக நட்டு தரப்படுகிறது.
அவற்றுக்கு, சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து பராமரித்து வந்தால், விவசாயிகளுக்கு, மரச்சாகுபடி திட்டமாக நல்ல வருவாய் கிடைக்கிறது.
பசுமை வளர்ப்பு பணியாக, வனத்துக்குள் திருப்பூர் - 10 திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கை தாண்டி 3.75 லட்சம் மரக்கன்றுகள் வரை நடப்பட்டுள்ளன.
இதில், உடுமலை பகுதியில் மட்டும், 2.15 லட்சம் மரக்கன்றுகள் வரை நடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், எலையமுத்துார் விவசாயி நாச்சிமுத்துவுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 500 மகா கனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அதே போல், மடத்துக்குளம் நீலம்பூர் விவசாயி நவநீதகிருஷ்ணன் நிலத்தில், ஆயிரம் பாக்கு மரக்கன்றுகள் நடவு செய்து தரப்பட்டது.
திட்ட குழுவினர் கூறுகையில், 'வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், கடந்த, 10 ஆண்டுகளில், 21 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டு, பெரும்பாலானவை மரங்களாக வளர்ந்துள்ளது. திட்டம் - 10ல், இலக்கை தாண்டி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த திட்டத்திற்கான பதிவு துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்ய விரும்புவோர், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என்றனர்.