/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் புத்தக திருவிழா - 2025: வாசிப்பின் மீது குறையாத நேசம்: மாணவ, மாணவியர் ஆர்வம்

ADDED : ஜன 30, 2025 07:23 AM

திருப்பூர் ; திருப்பூர் புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் மைதானத்தில் நடந்து வருகிறது. வருமு், 2ம் தேதி வரை நடக்கும் புத்தக திருவிழாவில், 140 அரங்குகளில், 60க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் தங்கள் பிரசுரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட ஏராளமான பொதுமக்களும் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
விழா ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:
சமூக ஊடகங்கள் வாயிலாக புத்தக வாசிப்பின் மீதான ஆர்வம் குறைந்திருக்கிறது என்ற பொதுவான கருத்து இருக்கத்தான் செய்கிறது. எந்தவொரு விஷயம் பேசு பொருளாக இருக்கிறதோ, அது சார்ந்த புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. உதாரணமாக, போட்டி தேர்வு வாயிலாக அரசுப்பணி பெறுவது தொடர்பான விழிப்புணர்வு இன்றயை இளைய சமுதாயத்தினர் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், அத்தகைய புத்தகங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. ச
மீபகாலமாக, உளவியல், பணவியல், தியானம் உள்ளிட்ட உடல் மற்றும் மனதை பண்படுத்தும் பயிற்சிகள் பல இடங்களில் நடத்தப்படுகிறது; அதை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. அது சார்ந்த புத்தகங்களையும் மக்கள் அதிகம் வாங்குகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் கதை புத்தகம் வாங்கும் ஆர்வத்தை பார்க்க முடிகிறது. வாசிப்பின் முக்கியத்துவத்தை இளைய சமுதாயம் உணர்ந்திருக்கிறது என்பதை இதன் வாயிலாக அறிய முடிகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.