/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் புத்தக திருவிழா 23ம் தேதி துவங்குகிறது!
/
திருப்பூர் புத்தக திருவிழா 23ம் தேதி துவங்குகிறது!
திருப்பூர் புத்தக திருவிழா 23ம் தேதி துவங்குகிறது!
திருப்பூர் புத்தக திருவிழா 23ம் தேதி துவங்குகிறது!
ADDED : ஜன 19, 2025 12:30 AM
திருப்பூர்: தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து, 21வது திருப்பூர் புத்தக திருவிழா நடத்துகின்றன.
வரும், 23ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 2ம் தேதி வரை, காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் வளாகத்தில் நடக்கிறது. 23ம் தேதி மாலை, 5:00 மணிக்கு துவக்க விழா நடக்கிறது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், துவக்கி வைக்கிறார். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர்.
தினமும் காலை, 11:00 முதல், இரவு, 9:30 மணி வரை புத்தக கண்காட்சி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று பேசவுள்ளனர்.
24ம் தேதி, மாலை, திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், 25ம் தேதி பவா செல்லதுரை, பேராசிரியர் நசீரா, 26ம் தேதி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலசந்திரன் பேசுகின்றனர்.
வரும், 27ம் தேதி, கவிஞர் நெல்லை ஜெயந்தா குழுவினரின் கவியரங்கம், 28ம் தேதி திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எஸ்.பி., யாதவ் கிரிஸ் அசோக், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோர் பேசுகின்றனர்.
29ம் தேதி, திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பரிசளிப்பு விழா நடக்கிறது; சிறப்பு அழைப்பாளராக ஜெகத்கஸ்பர் பங்கேற்று பேசுகிறார். 30ம் தேதி, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், 31ம் தேதி, தமிழக அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், பாரதிதாசன் பல்கலை., பேராசிரியர் அலிபாவா ஆகியோர் பேசுகின்றனர்.
அடுத்த மாதம் முதல் தேதி, கவிஞர். ஜீவபாரதி, கவிஞர். மகுடேஸ்வரன், நிறைவு நாளான, 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு டாக்டர். ஞானசம்பந்தன் குழுவினரின் பட்டிமன்றம் நடக்கிறது.
தினசரி மாலை, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். 'அறிவுச் செல்வத்தை அள்ளிச்செல்ல பள்ளி, கல்லுாரி மாணவர்களும், வாசகர்களும் பங்கேற்று பயன்பெற வேண்டும்,' புத்தக திருவிழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

