/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூண்டி நகராட்சி எல்லைக்குள் திருப்பூர் மாநகராட்சி குப்பை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை

ADDED : ஜூலை 17, 2025 10:47 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில், தினசரி, 700 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. அவற்றில் மிகக்குறைந்த அளவு மட்டுமே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தரம் பிரிக்கப்பட்டு, கையாளப்படுகிறது.
பெரும் பகுதி குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதில்லை. குப்பை கொட்டுவதற்கே இடமில்லாத சூழலில், பாறைக்குழிகளை தேடி பிடித்து, அதில், மாநகராட்சி நிர்வாகம் குப்பைக் கொட்டி வருகிறது.
இந்நிலையில், தற்போது நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில், மாநகராட்சி குப்பை கொட்டப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, அருகே, திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மா பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைக் கொட்ட மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பூண்டி நகராட்சி மக்களும், வார்டு கவுன்சிலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கவுன்சிலர் சுப்ரமணியம் கூறியதாவது:
கடந்த, 3 ஆண்டுக்கு முன்பே, அம்மாபாளையம் பாறைக்குழியில், மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டியது. மக்களின் எதிர்ப்பு, போராட்டத்தால், குப்பை கொட்டுவதை நிறுத்தியது. தற்போது, மீண்டும் அதே பாறைக்குழியில் குப்பைக்கொட்ட, தயாராகி வருகின்றனர்.
இதற்காக, 15 வேலம்பாளையம் வழியாக குப்பை எடுத்து வர திட்டமிட்டு, ஏற்பாடுகளை செய்து வருகிறது. அப்பகுதியில் குப்பை கொட்டக்கூடாது. மாறாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.