/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் 'பேர் டிரேடு இந்தியா' ஒப்பந்தம்
/
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் 'பேர் டிரேடு இந்தியா' ஒப்பந்தம்
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் 'பேர் டிரேடு இந்தியா' ஒப்பந்தம்
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் 'பேர் டிரேடு இந்தியா' ஒப்பந்தம்
ADDED : டிச 11, 2024 04:55 AM
திருப்பூர்; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 'பேர் டிரேடு இந்தியா' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சமூக சந்தைகளுக்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலையான உற்பத்தி நடைமுறைகளை அமல்படுத்தும் நோக்கத்துடன், இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சங்க தலைவர் சுப்பிரமணியன், 'பேர்டிரேடு' இந்தியா நிறுவன அதிகாரி அபிேஷக் ஜானி ஆகியோர் நேற்று முன்தினம் கையெழுத்திட்டனர்.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், பசுமை சார் உற்பத்தி திறமையை வளர்க்கவும், வளம் குன்றா வளர்ச்சி நிலையை எட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இந்த ஒப்பந்தம் கைகொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உட்பட, பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு, நிலையான ஆற்றல், நீர் மற்றும் ரசாயண மேலாண்மை, உமிழ்வு குறைப்பு, நிலைத்தன்மை உதவி மையம், உலகளாவிய 'ரீச்' மற்றும் 'பேர் டிரேடு' தர நிலைகளை ஏற்றுக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.