/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்க ஜவுளி கண்காட்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்! வர்த்தகம் மேம்படும் என நம்பிக்கை
/
அமெரிக்க ஜவுளி கண்காட்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்! வர்த்தகம் மேம்படும் என நம்பிக்கை
அமெரிக்க ஜவுளி கண்காட்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்! வர்த்தகம் மேம்படும் என நம்பிக்கை
அமெரிக்க ஜவுளி கண்காட்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்! வர்த்தகம் மேம்படும் என நம்பிக்கை
ADDED : ஜூலை 24, 2025 11:24 PM
திருப்பூர்; அமெரிக்காவில் துவங்கியுள்ள 'நியூயார்க் டெக்ஸ் வேர்ல்ட் 2025' கண்காட்சியில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.
அமெரிக்கா, நியூயார்க் நகரில் துவங்கியுள்ள டெக்ஸ் வேர்ல்டு ஜவுளி கண்காட்சியில், தமிழக அரசின் ஜவுளித்துறை சார்பில், 'தமிழ்நாடு வளாகம்' காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவுக்கான இந்திய துாதர் பினாய ஸ்ரீகாந்த் பிரதான், திறந்து வைத்தார்.
தமிழக அரசின் ஜவுளித்துறை செயலர் அமுதவல்லி, கோ - ஆப்டெக்ஸ் இயக்குனர் தீபக், இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு சார்பில் கோபாலகிருஷ்ணன், உண்ணிகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலர் குமார் துரைசாமி, செயற்குழு உறுப்பினர் ராமு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கண்காட்சி குறித்த, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் கூறியதாவது:அமெரிக்க கண்காட்சியில், திருப்பூர், சென்னை மற்றும் கரூரைச் சேர்ந்த, 20 ஏற்றுமதியாளர்கள், தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு முறையால், இந்தியாவின் ஜவுளித்துறைக்கு சாதகமான சூழல் நிலவும் இக்காலகட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள, தமிழக அரசு, இக்கண்காட்சியில் பங்கேற்று, அரங்கு அமைக்க மானியம் அளித்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த, 10 நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
நம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு துாதரகம் பல்வேறு விஷயங்களை முன்னெடுக்கிறது. சரக்குளை பெற்றுக் கொண்டு பணம் தர மறுக்கும் இறக்குமதியாளர்களை கையாள்வது குறித்து, விளக்கம் கேட்ட போது, அதற்கான வழிமுறை, சட்ட நடைமுறைகள் குறித்தும், துாதரக அதிகாரிகள் விளக்கியுள்ளனர். தமிழக அரசு, தொழில் வளர்ச்சியில் மிகுந்து ஈடுபாடுடன் செயல்படுகிறது. குறிப்பாக, ஜவுளித்துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை செய்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.