/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வரி செலுத்துவதில் திருப்பூர் முன்மாதிரி'
/
'வரி செலுத்துவதில் திருப்பூர் முன்மாதிரி'
ADDED : டிச 20, 2024 04:26 AM

திருப்பூர்; ''அரசுக்கு வரி செலுத்துவதில், திருப்பூர் முன்மாதிரியாக உள்ளது'' என்று வருமான வரித்துறை டி.டி.எஸ்., சரக கூடுதல் கமிஷனர் ஸ்ரீவிஜய் பாராட்டினார்.
கோவை வருமான வரித்துறை டி.டி.எஸ்., பிரிவு, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் திருப்பூர் கிளை சார்பில், டி.டி.எஸ்., மற்றும் டி.சி.எஸ்., குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ராயபுரம் பெத்திச்செட்டிபுரத்தில் நேற்று மாலை நடந்தது.
கோவை வருமான வரித்துறை டி.டி.எஸ்., சரக கூடுதல் கமிஷனர் ஸ்ரீ விஜய் பேசியதாவது:
திருப்பூர் மாநகரில் வரி செலுத்துபவர்கள் எப்போதும், டி.டி.எஸ்., மற்றும் டி.சி.எஸ்., வரியை அரசுக்கு செலுத்துவதில் முன்மாதிரியாக உள்ளனர். டி.டி.எஸ்., என்பது ஒருவர் வருமானம் ஈட்டும் போது, ஒரு தொகையை அரசுக்கு செலுத்தி, அதற்குரிய ஆவணங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்வதன் மூலம் தேவையற்ற வட்டி மற்றும் அபராதத்தில் இருந்து தப்ப முடியும். இதுகுறித்து சந்தேகங்கள் இருந்தால், வருமான வரித்துறையை அணுகி நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தொழில் செய்பவர்களுக்கும், அவர்களுடைய கணக்காளர்களுக்கு, டி.டி.எஸ்., சட்டத்தை முறையாக அறிந்து பின்பற்ற உதவி புரியும் என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
டி.டி.எஸ்., குறித்து இந்திய பட்டய கணக்காளர் நிறுவன திருப்பூர் கிளை தலைவர் செந்தில்குமாரும், டி.டி.எஸ்., ரிட்டன் தாக்கல் குறித்து ஆடிட்டர் விஷ்ணுகுமாரும், டி.டி.எஸ்., சட்டத்தை பின்பற்றத் தவறினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதைத் தீர்க்கும் முறைகள் குறித்து வருமான வரி அலுவலர் ஜெகநாதனும் பேசினர்.