/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் வடக்கு ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
/
திருப்பூர் வடக்கு ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
திருப்பூர் வடக்கு ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
திருப்பூர் வடக்கு ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 10, 2025 11:31 PM

திருப்பூர்; திருப்பூர், வடக்கு ரோட்டரி சங்கத்தின், 41வது ஆண்டு, புதிய தலைவராக குணசேகரன், செயலாளராக அம்பி ரத்னம், பொருளாளராக குபேந்திரன், பயிற்றுனராக ராம்பாபு சிங் உட்பட நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.
உடனடி முன்னாள் தலைவர் செல்லதுரை, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் பொறுப்புகளை ஒப்படைத்தனர்.
குடியாத்தத்தைச் சேர்ந்த முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜாவரிலால் ஜயின் சிறப்பு விருந்தினராகவும், பார்க் பிரேமா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ரவி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், உதவி ஆளுநர் சதீஷ்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.
விழாவில், மருத்துவ, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. 'ைஹபிரிட் மீட்டிங் கான்சப்ட்' அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தலைவர் குணசேகரன் பேசுகையில், ''மக்களுக்கு பயனுள்ள விடுதி, டயாலிசிஸ் விரிவாக்கம், தர்ப்பணாலயம் உள்ளிட்ட திட்டங்கள், ஏறத்தாழ, 3 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்ற உள்ளோம்,'' என்றார்.

