/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பம்; இன்று கோலாகலமாக துவங்குகிறது!
/
திருப்பூர் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பம்; இன்று கோலாகலமாக துவங்குகிறது!
திருப்பூர் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பம்; இன்று கோலாகலமாக துவங்குகிறது!
திருப்பூர் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பம்; இன்று கோலாகலமாக துவங்குகிறது!
ADDED : ஜன 14, 2025 06:43 AM
திருப்பூர்; 'திருப்பூர் பொங்கல் திருவிழா' என்ற பெயரில் மூன்று நாள் நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது. இவ்விழா, நகரின் மையமாகக் கடந்து செல்லும் நொய்யல் நதியின் கரையில் மூன்று நாள் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விழா நடைபெறும் இடத்தில் துாய்மைப் பணியும், மேடை மற்றும் பொங்கல் வைக்கும் இடங்களில் முன்னேற்பாடுகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இன்று முதல் நாள், காலை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து தெற்கு ரோட்டரி சங்கம், ஜீவநதி நொய்யல் சங்கம் மற்றும் நிட்மா சங்கம் ஆகியன சார்பில் முதல் நாள் பொங்கல் விழா இன்று துவங்குகிறது.
இதில் 501 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பொங்கல் விழா, விகடகவி குழுவினரின் மங்கள இசையுடன் துவங்கவுள்ளது. இன்று காலை 6:00 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், அதையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.இதில், சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்டம். பெருஞ்சலங்கையாட்டம், பவளக்கொடி கும்மியாட்டம் மற்றும் காவடியாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். நொய்யல் கரையில் உள்ள கமல விநாயகர் மற்றும் சித்தி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடும் தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, மாலை 4:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
இதில் விகடகவி குழுவின் கிராமியக் கலை நிகழ்ச்சிகள், விகாஸ் வித்யாலயா, தெற்கு ரோட்டரி மற்றும் பாலபவன் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவற்றில் அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாளைய விழா
நொய்யல் பண்பாட்டு அமைப்பு, திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து நடத்தும் பொங்கல் திருவிழா நாளை யுனிவர்சல் தியேட்டர் ரோடு, நொய்யல் கரையில் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடக்கிறது. நாளை மறுநாள், (16ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு சிலம்பாட்டம், காவடியாட்டம், பறையிசை, நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள், நாடகம் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

