/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் ரன்னர்ஸ் மராத்தான்-2025
/
திருப்பூர் ரன்னர்ஸ் மராத்தான்-2025
ADDED : மே 14, 2025 06:47 AM
திருப்பூர், ; திருப்பூரில் நடக்கஉள்ள ரன்னர்ஸ் மராத்தான்-2025 முன்பதிவு துவங்கியது.
'டாப்லைட்' திருப்பூர் ரன்னர்ஸ் மராத்தான்-2025 போட்டி ஜூலை 20ம்தேதி நடக்க உள்ளது. இப்போட்டிக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக நேற்று துவங்கப்பட்டது.
துவக்க விழா திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் துவங்கியது.
மராத்தானுக்கான ஸ்பான்சராக டாப்லைட், டெக்கோஸ்போர்ட், அபி ஸ்கேன் அன்ட் லேப்ஸ், சோனி சென்டர் மற்றும் ஏ.எம்.சி., சூப்பர்ஸ்பெஷலிட்டி மருத்துவமனை மற்றும் அனிதா டெக்ஸ்காட் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். பங்கேற்க விரும்புவர்கள், www.toplighttirupurrunner smarathon.com மூலம் பதிவு செய்யலாம்.
திருப்பூர் மற்றும் பல பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
திருப்பூர் ரன்னர்ஸ் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் உற்சாகமாக பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளனர்.