/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சப்-ஜூனியர் கபடி அணிக்கு திருப்பூர் மாணவர் தேர்வு
/
சப்-ஜூனியர் கபடி அணிக்கு திருப்பூர் மாணவர் தேர்வு
சப்-ஜூனியர் கபடி அணிக்கு திருப்பூர் மாணவர் தேர்வு
சப்-ஜூனியர் கபடி அணிக்கு திருப்பூர் மாணவர் தேர்வு
ADDED : நவ 26, 2025 06:33 AM

திருப்பூர்: தமிழக சப்-ஜூனியர் கபடி அணிக்கு திருப்பூரை சேர்ந்த மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் கூறியதாவது:
தமிழக அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில், 8ம் தேதி சேலத்தில் மிக இளையோர் அணிக்கான தேர்வு நடைபெற்றது. அதில், திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில், ஏழு பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதில் சிறப்பாக விளையாடிய திருப்பூர் கே.எஸ்.சி, அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவர் தருண், தமிழக மிக இளையோர் சிறுவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தருண், நாளை (27ம் தேதி) முதல் 30ம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெறும், 35வது சப்-ஜூனியர் சிறுவர் தேசிய சேம்பியன் ஷிப் போட்டியில், தமிழக அணியில் பங்கேற்று விளையாட உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில அணிக்கு தேர்வு பெற்ற மாணவரை மாவட்ட கபடி கழக ேசர்மன் முருகேசன், தலைவர் மனோகரன், செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், பொருளாளர் ஆறுசாமி ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

