/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் மாணவர்கள் நீச்சல் போட்டியில் அசத்தல்
/
திருப்பூர் மாணவர்கள் நீச்சல் போட்டியில் அசத்தல்
ADDED : ஜூன் 17, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கடல் நீச்சல் போட்டியில் திருப்பூர் மாணவர்கள் சாதித்துள்ளனர்.
சென்னையில் நடந்த கடல் நீச்சல் போட்டியில், திருப்பூர் மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில், பல்வேறு பிரிவுகளில், 11 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 500 மீ., பிரிவில், பிரணவ் முதலிடம்; 5 கி.மீ., பிரிவில், பார்த்தசாரதி இரண்டாமிடம் பிடித்து, சாதனை படைத்தனர். மற்ற மாணவர்கள் அனைவரும் குறிப்பிட்ட துாரத்தை நிறைவு செய்து, பதக்கம் பெற்றனர். இவர்களை, மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் சுதீஷ், பயிற்சியாளர்கள் சிபு, சந்துரு ஆகியோர் பாராட்டினர்.