/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எரிந்த ஆம்னி பஸ்: திருப்பூர் வாலிபர் பலி
/
எரிந்த ஆம்னி பஸ்: திருப்பூர் வாலிபர் பலி
ADDED : அக் 25, 2025 01:28 AM

திருப்பூர்: ைஹதராபாத் - பெங்களூரு ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில், திருப்பூரை சேர்ந்த வெங்காய வியாபாரியின் மகன் பலியானார்.
தெலுங்கானா தலைநகர் ைஹதராபாத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை, கர்நாடகாவின், பெங்களூருவுக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டுச்சென்றது.
நேற்றுமுன்தினம் அதிகாலை, ஆந்திர மாநிலம், கர்னுால் அருகே, பைக் மீது மோதிய பஸ், தீப்பிடித்து எரிந்தது. இதில் திருப்பூரை சேர்ந்த வெங்காய வியாபாரியின் மகன் உயிரிழந்துள்ளார்.
பூலுவப்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜா, 63; தள்ளுவண்டியில் வெங்காயம் வியாபாரம் செய்துவருகிறார்; மனைவி சாந்தி. இவர்களுக்கு, இரண்டு மகன்கள்.
இளையமகன் யுவன்சங்கர்ராஜ், 22 ைஹதராபாத்திலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வருகிறார். தீபாவளிக்கு விடுமுறை கிடைக்காத நிலையில், பண்டிகை முடிந்தபின் விடுமுறை எடுத்துக்கொண்டு, பெற்றோரை பார்ப்பதற்காக, நேற்று முன்தினம் திருப்பூருக்கு புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்சில் பயணித்த யுவன் சங்கர்ராஜ் பலியாகியுள்ளார்.

