/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆயுத பூஜைக்கு திருப்பூர் ஆயத்தம்!
/
ஆயுத பூஜைக்கு திருப்பூர் ஆயத்தம்!
ADDED : அக் 09, 2024 12:28 AM

திருப்பூர் : நவராத்தி விழாவின் நிறைவாக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் கடந்த, 3ம் தேதி துவங்கிய நவராத்திரி விழா வரும் 11ம் தேதி சரஸ்வதி பூஜையுடன் நிறைடைந்து, 12ம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆகியன கல்வி நிறுவனங்களிலும், வர்த்தக மையங்கள், கடைகள், தொழிற்சாலைகளில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
இதில், கட்டடங்கள், அலுவலகங்கள் சுத்தப்படுத்தி, அலங்கரிக்கப்படும். அவ்வகையில் இந்த பூஜைகளின் போது, அனைத்து இடங்களிலும் வர்ண காகிதங்கள், தோரணங்கள், பூக்கள், மலர் மாலைகள் கொண்டு அலங்கரித்து வழிபாடு நடத்தப்படும்.
இந்த அலங்காரத்துக்குப் பயன்படுத்தும் மிளிரும் காகிதங்கள், ரிப்பன் காகிதங்கள், பல வடிவங்களில் வெட்டிய வர்ண காகிதங்கள் போன்றவை தற்போது கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆயுத பூஜைக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், இந்த அலங்கார தோரணங்கள் விற்பனை இன்று முதல் மூன்று நாட்களுக்கு பரபரப்பாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.