/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கிட்னி' செயல்பாட்டில் ஏற்படும் கோளாறு; திருப்பூர் கிட்னி சென்டர் தருகிறது தீர்வு
/
'கிட்னி' செயல்பாட்டில் ஏற்படும் கோளாறு; திருப்பூர் கிட்னி சென்டர் தருகிறது தீர்வு
'கிட்னி' செயல்பாட்டில் ஏற்படும் கோளாறு; திருப்பூர் கிட்னி சென்டர் தருகிறது தீர்வு
'கிட்னி' செயல்பாட்டில் ஏற்படும் கோளாறு; திருப்பூர் கிட்னி சென்டர் தருகிறது தீர்வு
ADDED : பிப் 15, 2025 07:10 AM
சிறுநீரக பிரச்னைக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை வழங்கும் 'கிளினிக்' நிலையில் செயல்பட்டு வந்த திருப்பூர் கிட்னி சென்டர், தற்போது, தேசிய தரச்சான்று பெற்று, அதி நவீன சிகிச்சை வழங்கும் மருத்துவ மனையாக மாறியுள்ளது.
இதுகுறித்து, அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர். கார்த்திகேயன் கூறியதாவது;கடந்த, 2007ல், திருப்பூர், குமார் நகர், பி.என்., ரோடு சந்திப்பில் உள்ள, 60 அடி ரோட்டில், 'திருப்பூர் கிட்னி சென்டர்' துவங்கப்பட்டது.
தற்போது, எக்ஸ்ரே, ஸ்கேன், நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் படுக்கை மற்றும் அறுவை சிகிச்சை கூடம், அனைத்து நவீன மருத்துவ வசதிகள், லேசர் சிகிச்சை என, உலகத்தர சிகிச்சை வழங்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறோம்.சிறுநீரகம், அதன் செயல்பாடு குறித்து ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
பரபரப்பான வாழ்க்கை சூழலில், ஓய்வில்லாமல் உழைப்பதால், சிறுநீரகம் மூலம் கழிவுகள் வெளியேறுவதில் பிரச்னை ஏற்படுகிறது. பொதுவாக, 20 முதல், 40 வயது பிரிவினருக்கு சிறுநீரக கல் அடைப்பு பிரச்னை அதிகளவில் ஏற்படுகிறது.
ஆறு மாதம் துவங்கி, 80 வயது முதியவருக்கும் கூட இப்பிரச்னை வரலாம்; பரம்பரை வியாதியாகவும் தொடரலாம்.அடி வயிற்றில் வலி, தொடர் வாந்தி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
ஸ்கேன் பார்த்து விட்டு வைத்தியம் பார்ப்பதே நல்லது; அப்போது தான், பிரச்னையின் தன்மையை தெளிவாக அறிந்துக் கொள்ள முடியும். குழந்தைகளுக்கு, சிறுநீரக பாதையில் அடைப்பு ஏற்பட கூடாது; ஏனெனில், சிகிச்சை வழங்குவது கடினம். குழந்தைகளுக்கு சிறுநீரக பிரச்னை தொடர்பான அறிகுறி தென்பட்டால், 'எம்.சி.ஓ.,' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
எங்கள் மருத்துவமனையில், சிறுநீரக பிரச்னைக்கு உலகத்தர சிகிச்சை வழங்கி வருகிறோம்; தமிழக அரசின் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம், ஸ்டார் ெஹல்த் உள்ளிட்ட காப்பீடு திட்ட சலுகைகளும் உள்ளன.
இதுவரை, 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கியுள்ளோம்; 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்துள்ளோம். என்.ஏ.பி.எச்., என்ற தேசிய தரச்சான்று பெற்றுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

