/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூட்டியே கிடக்கும் திருப்பூர் குமரன் நினைவிடம்!
/
பூட்டியே கிடக்கும் திருப்பூர் குமரன் நினைவிடம்!
ADDED : நவ 23, 2024 03:24 AM
திருப்பூர்: திருப்பூர் குமரன் நினைவிட மண்டபம் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக திறக்கப்படாமல், பூட்டி கிடப்பது, வேதனை அடையச் செய்கிறது.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, சுதந்திர போராட்ட தியாகியான கொடி காத்த குமரனுக்கு நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், குமரன் நினைவுத்துாண், குமரனின் மனைவியான ராமாயி அம்மாள் சமாதி உள்ளன. தனி மண்டபத்தில், குமரன் சிலை மற்றும் சுதந்திர போராட்ட வரலாற்று புத்த-கங்கள் அடங்கிய நுாலகம், குமரனின் வரலாறு, சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களும் வைக்-கப்பட்டுள்ளன.
தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குமரன் நினைவிடம், தினமும் காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை செயல்படும். மக்கள் பலரும், குமரன் நினைவு வளாகத்திலுள்ள குமரன் சிலை, அவரது மனைவியின் சமாதியை பார்வையிடுவது. மலர் துாவி மரியாதை செலுத்துவது, புகைப்படங்களை பார்வையிட்டுச் செல்வது வழக்கம்.
குமரன் நினைவு வளாக செயல்பாட்டுக்காக வழிகாட்டி காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 13 நாளாக இவர், பணிக்கு வரவில்லை. இதனால், அருகிலுள்ள தள்ளுவண்டி கடைக்காரர்களே, காலையில் திறந்து, மாலையில் கதவை பூட்டுகின்றனர். ஆனால், நுாலகம், புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள மண்டப கதவுகள் பூட்டியே கிடக்கின்றன.
இதனால், நினைவிடத்துக்கு வருவோர், வளாகத்தை மட்டும் சுற்றிப்பார்த்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மண்டபத்துக்குள் செல்ல முடியாததால், குமரன் சிலையை பார்க்கவோ, நுாலகத்தி-லுள்ள புத்தகங்களை படிக்க, புகைப்படங்களை பார்வையிட முடிவதில்லை.
செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இவ்வாறு, தியாகி குமரன் மண்-டபம் பத்து நாட்களுக்கும் மேலாக பூட்டி கிடப்பது, சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினரையும், பொதுமக்களையும் வேதனை அடையச் செய்கிறது. எனவே, இது விஷயத்தில், கலெக்டர் தலையிட்டு உரிய தீர்வு காண மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.