/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இந்தியாவின் பட்டு தேவை 30 ஆயிரம் மெட்ரிக் டன் :விஞ்ஞானி பேச்சு
/
இந்தியாவின் பட்டு தேவை 30 ஆயிரம் மெட்ரிக் டன் :விஞ்ஞானி பேச்சு
இந்தியாவின் பட்டு தேவை 30 ஆயிரம் மெட்ரிக் டன் :விஞ்ஞானி பேச்சு
இந்தியாவின் பட்டு தேவை 30 ஆயிரம் மெட்ரிக் டன் :விஞ்ஞானி பேச்சு
ADDED : ஜூலை 31, 2011 11:16 PM
உடுமலை : ''இந்தியாவிற்கு பட்டுத்தேவை 30 ஆயிரம் மெட்ரிக் டன்; ஆனால் நமது
உற்பத்தியோ 19 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே உள்ளது,'' என சேலம் மண்டல பட்டு
வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானி பாலகிருஷ்ணா கூறினார்.
உடுமலையில்
பட்டுவளர்ச்சித்துறை சார்பில் நடந்த விழாவில், 1108 விவசாயிகளுக்கு 163.423
லட்சம் ரூபாய் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. உடுமலையில்,
பட்டுவளர்ச்சித்துறை சார்பில், பட்டு விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும்
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைமை வனபாதுகாவலர்
மற்றும் சேலம் பட்டுவளர்ச்சித்துறை இயக்குநர் பிரபாகரன் வரவேற்று
பேசுகையில்,' பப்பாளி பூச்சி தாக்குதலால், பட்டுப்புழு விவசாயிகள்
நஷ்டமடைந்தனர். வேகமாக பரவி வந்த பப்பாளி பூச்சி தாக்குதலை ஒட்டுண்ணிகள்
மூலமாக கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும், ஒரு சில பகுதிகளில் மாவுப்பூச்சி
தென்படுகிறது. மாவுப்பூச்சியினை கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகளை பயன்படுத்த
வேண்டும். தற்போது பருவ மழை பெய்து வருவதால், நீர் பாசனத்தின் மூலம்
அதிகளவு மல்பரி சாகுபடி செய்ய வேண்டும். சீனாவிலிருந்து வெண்பட்டு
இறக்குமதி செய்யப்படுகிறது. விவசாயிகள் நினைத்தால், தமிழகத்திலிருந்து
சீனாவிற்கு வெண்பட்டு ஏற்றுமதி செய்யலாம்,' இவ்வாறு அவர் பேசினார்.
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலர்
முத்துக்குமாரசாமி பேசுகையில்,' விவசாயிகளுடன் அதிகாரிகளும் சேர்ந்து
பணியாற்ற வேண்டும். பட்டுக்கூடு விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும்
நிறைவேற்றப்படும். பட்ஜெட் கூட்டத் தொடரில், விவசாயிகளுக்காக முதல்வர்
பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளார். கூட்டு முயற்சியாக செயல்பட்டால்,
பட்டு உற்பத்தியில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும்,'
என்றார். சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானி
பாலகிருஷ்ணா பேசியதாவது: ' உலக அளவில், பட்டு உற்பத்தியில், 80 சதவீதம்
சீனா, 13 சதவீதம் இந்தியாவும், மற்ற நாடுகள் 7 சதவீதமும் உள்ளது.
தமிழகத்தில், 30 ஆயிரம் விவசாயிகள் 35ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், மல்பரி
பயிரிட்டுள்ளனர். ஆண்டிற்கு சராசரியாக இதன் மூலம் 1300 மெட்ரிக் டன் பட்டு
உற்பத்தி செய்யப்படுகிறது. வெண்பட்டு உற்பத்தியில் இந்தியாவில், தமிழகம்
முதலிடம் வகிக்கிறது. உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்த மல்பரி
வளர்ப்பில்,கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவிற்கு பட்டுத்தேவை 30
ஆயிரம் மெட்ரிக் டன் ஆனால் நமது உற்பத்தியோ 19ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே
உள்ளது. ஆகவே, இந்த இடைவெளியை நிரப்ப உற்பத்தியை பெருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். தொகுப்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி,
பவானி, சானார்பட்டி, ஊத்தங்கரை ஆகிய நான்கு தொழில்நுட்ப சேவை
மையங்களுக்கும் சிறந்த முறையில், விரிவாக்க பணியாற்ற இருசக்கர வாகனங்கள்
வழங்கப்பட்டது. மொத்தம் 1108 விவசாயிகளுக்கு 163.423லட்சம் ரூபாய் அரசு
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், ஊரக தொழில்துறை அமைச்சர், உடுமலை
எம்.எல்.ஏ., மத்திய பட்டுவாரியம் மற்றும் பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகள்,
விவசாயிகள் பங்கேற்றனர். ஈரோடு மண்டல இணை இயக்குநர் சந்திரசேகரன் நன்றி
கூறினார்.

