/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரமில்லாத காரணத்தால் நடைபாதை சிலாப் சேதம்
/
தரமில்லாத காரணத்தால் நடைபாதை சிலாப் சேதம்
ADDED : ஆக 03, 2011 10:36 PM
திருப்பூர் : திருப்பூர் பார்க் ரோட்டில் மக்கள் நடந்து செல்ல வசதியாக அமைக்கப்பட்ட நடைபாதை, நான்கே மாதத்தில் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி அருகே எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து செல்லும் பார்க் ரோட்டில் இடதுபுறமும், வலதுபுறமும் ஏற்கனவே இருந்த நடைபாதையில் நான்கு மாதங்களுக்கு முன், கான்கிரீட் சிலாப் அமைக்கப்பட்டது. பணிகள் தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்டதால், நடைபாதை அமைக்கப்பட்டு நான்கு மாதங்கள் கூட ஆகாத நிலையில், கான்கிரீட் சிலாப்கள் அனைத்தும் பெயர்ந்தும், உடைந்தும் வருகின்றன. முறையாக கான்கிரீட் போடப்பட்டு, சிலாப்கள் ஒட்டப்படாததே இதற்கு காரணம். போக்குவரத்து அதிகமுள்ள இந்த ரோட்டில், வாகன விபத்தில் இருந்து தப்பிக்க நடைபாதையை பயன்படுத்தும் மக்கள் தடுக்கி விழுவதோடு, உடைந்து கிடக்கும் சிலாப்களில் ஏறி நடக்க முடியாமல் தடுமாறியும் விழுகின்றனர்.