/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறி ஸ்டிரைக் வேதனை அளிக்கிறது :ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் கருத்து

ADDED : செப் 21, 2011 12:16 AM
திருப்பூர் : 'அமைச்சர் முன்னிலையில் ஒப்புக்கொண்ட நெசவுக் கட்டண உயர்வை
ஏற்காமல், விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வது வேதனை
அளிக்கிறது' என, ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கோவை -
திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பு சார்பில்
திருப்பூர் சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: இரண்டு
மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் பொங்கலுக்குப்
பின் பேசலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தொழில் நலன் கருதி,
கலெக்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 10 சதவீதம் உயர்வுக்கு முன் வந்தோம்.
இதை ஏற்க மறுத்ததால், கடந்த 18ம் தேதி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள்
முன்னிலையில் மீண்டும் பேச்சு நடத்தப்பட்டது. அதன் முடிவில், முதலில் 20
சதவீதமும், பின் 25 சதவீதமும் என நெசவுக்கட்டணம் உயர்த்த முடிவானது. இது,
இரண்டு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜனவரியில் கமிட்டி அமைத்து பிற
மாவட்டம், மாநிலங்களை ஒப்பிட்டு நெசவுக் கட்டணம் சீராக முறைப்படுத்தவும்
அறிவுறுத்தப்பட்டது. இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட பின், விசைத்தறியாளர்கள்
வேலை நிறுத்தம் தொடர்வது வேதனை அளிக்கிறது, என்று தெரிவித்துள்ளார்.