/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அம்மனுக்கு தங்க கவசம் சாத்துபடி
/
அம்மனுக்கு தங்க கவசம் சாத்துபடி
ADDED : ஏப் 16, 2025 11:41 PM
உடுமலை; உடுமலை மாரியம்மனுக்கு தங்க கவசம் சாத்தி வழிபாடு செய்ய பக்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா பிரசித்தி பெற்றது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் போது, பல்வேறு நேர்த்திக்கடன்களை மேற்கொள்கின்றனர்.
மேலும்,இக்கோவிலில், தங்கக்கவசம் சாத்தி வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும். மாதேவி, மகாதேவி, பூதேவி, புகழ்தேவி, உடுமலை தேவி என பக்தர்களால் போற்றப்படும் மாரியம்மனுக்கு தங்க கவசம் சாத்தி வழிபடுவது பல்வேறு நன்மைகளை தரும். இதற்காக திருக்கோவில் கட்டணமாக, ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பும் நாளில், தங்கக்கவசம் சாத்தி விசேஷ பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கப்படும்.
வியாபார அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை தரும், தங்க கவசம் சாத்துபடிக்கு உடுமலை பக்தர்கள் என்றும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதே போல், கோவிலில் வழங்கப்படும் திருநீறு, குங்குமம், தீர்த்தம், பொங்கல் பிரசாதங்களை சிந்தாமல், சிதறாமல் கவனமாக வீட்டுக்கு கொண்டு செல்ல கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.