/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்கம் அருவியிலிருந்து வரும் குடிநீர்: குழாய் சீரமைக்க ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு

ADDED : ஜன 12, 2024 11:14 PM
உடுமலை:உடுமலை நகராட்சிக்கு, திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியிலிருந்து குடிநீர் வரும் பிரதான குழாயை சரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சிக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, இரு குடிநீர் திட்டங்களின் கீழ், ஏறத்தாழ, 9.50 எம்.எல்.டி., குடிநீர் எடுக்கப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது.
பழைய குடிநீர் திட்டம், திருமூர்த்திமலை, பஞ்சலிங்கம் அருவியிலிருந்து, நேரடியாக, தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
சுத்திகரிக்கப்படும் குடிநீர், குழாய்கள் வழியாக நகரப்பகுதிக்கு கொண்டு வந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றி வினியோகம் செய்யப்படுகிறது. இரு குடிநீர் திட்டங்களுக்கும், தற்போது திருமூர்த்தி அணையிலிருந்து நேரடியாக நீர் எடுக்கப்படுகிறது. பஞ்சலிங்கம் அருவியிலிருந்து வரும் குழாய் பழுதடைந்துள்ளது. கோடை காலங்களில், அணை நீர்மட்டம் குறையும் போது, சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், முதலில் அமைக்கப்பட்ட திட்டமான, பஞ்சலிங்கம் அருவியிலிருந்தும், நீர் கொண்டு வரும் வகையில், பிரதான குழாய் பழுது நீக்கவும், சேதமடைந்துள்ள வால்வுகளை சீரமைக்கவும், வால்வு தொட்டிகளுக்கு, கான்கிரீட் கவர் சிலால் அமைக்கவும், ரூ.6 லட்சம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தீர்மானம், நேற்று நடந்த நகராட்சி சிறப்புக்கூட்டத்தில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.