sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதிய புறக்காவல் நிலையங்கள் அமைக்க... கருத்துரு என்னாச்சு?குற்ற சம்பவங்கள் அதிகரித்தும் அலட்சியம்

/

புதிய புறக்காவல் நிலையங்கள் அமைக்க... கருத்துரு என்னாச்சு?குற்ற சம்பவங்கள் அதிகரித்தும் அலட்சியம்

புதிய புறக்காவல் நிலையங்கள் அமைக்க... கருத்துரு என்னாச்சு?குற்ற சம்பவங்கள் அதிகரித்தும் அலட்சியம்

புதிய புறக்காவல் நிலையங்கள் அமைக்க... கருத்துரு என்னாச்சு?குற்ற சம்பவங்கள் அதிகரித்தும் அலட்சியம்


ADDED : ஜூலை 03, 2024 02:38 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;குடிமங்கலம் மற்றும் தளி போலீஸ் கட்டுப்பாட்டில், அதிகளவு கிராமங்கள் இருப்பதால், கூடுதலாக புறக்காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கருத்துருவுடன் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பல்வேறு பணிகளில் பாதிப்பு தொடர்கதையாக உள்ளது.

உடுமலை போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில், 18 ஊராட்சிக்குட்பட்ட, 40 கிராமங்கள் இருந்தன.

திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதும், கோவை மாவட்டம் நெகமம் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த திருப்பூர் மாவட்ட கிராமங்கள் பிரிக்கப்பட்டு, குடிமங்கலம் போலீசில் சேர்க்கப்பட்டன.

தற்போது, குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில், 23 ஊராட்சிகளுக்குட்பட்ட 96 கிராமங்கள் உள்ளன. அதிகளவு கிராமங்கள் மற்றும் எல்லை காரணமாக, குடிமங்கலம் போலீசார், தொடர்ந்து குற்றத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதில்லை.

கிராமங்களில், முறைகேடாக 'சில்லிங்' மது விற்பனை தடையில்லாமல், தற்போதும் நடக்கிறது. பொது இடங்களில், மது அருந்துவது உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.

பெதப்பம்பட்டி நால்ரோட்டில், மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது. தொடர் ரோந்து செல்லாதது உட்பட காரணங்களால், கிராமங்களில், விளைநிலங்களில், கேபிள் வயர் திருட்டு உட்பட சம்பவங்கள் குறையவில்லை.

இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டு கிராமங்களை பிரித்து, புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புறக்காவல் நிலையம் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன், கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டது. பல்வேறு காரணங்களால், கூடுதலாக புறக்காவல் நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தளி போலீஸ் கட்டுப்பாட்டிலும், கோவை மாவட்டம் கோமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டிலிருந்த கிராமங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. தற்போது, 45க்கும் அதிகமான கிராமங்கள் தளி போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதில், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனப்பகுதியிலுள்ள ஆறு மலைவாழ் கிராமங்களும் உள்ளடங்கும்.

போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வெகு தொலைவு தள்ளி அமைந்துள்ள கிராமங்களில், குற்றத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள தேவனுார்புதுாரில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டது.

தேவனுார்புதுாரில், இரு மாவட்ட எல்லையில், வாகன தணிக்கைக்காக அமைக்கப்பட்ட நிரந்தர செக்போஸ்ட்டும் காட்சிப்பொருளாக மாறி விட்டது.

இதை, புறக்காவல் நிலையமாக தரம் உயர்த்தி, போலீசார் நியமிக்க வேண்டும். இதனால், அப்பகுதியில், பல்வேறு குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து தமிழக முதல்வருக்கும், அப்பகுதி மக்கள் சார்பில், தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புறக்காவல் நிலையங்கள் அமைக்கும் திட்டத்துக்கான கருத்துரு பல ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த கருத்துருவை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us