ADDED : ஆக 04, 2025 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி, கல்லுாரி உள்ள இடங்களில், 300 அடிக்குள் புகையிலை பொருட்களை கட்டாயம் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி மற்றும் கல்லுாரி அமைந்துள்ள இடங்களுக்கு அருகாமையில், புகையிலை பயன்பாடு இல்லாத பகுதி என்பதை உறுதி செய்யும் வகையில், 'புகையிலை இல்லாத பகுதி' என, மஞ்சள் நிற பெயின்டால் ரோட்டில் எழுதப்பட்டுள்ளது. இது, வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. பல்லடம் வட்டார நெடுஞ்சாலைகள் பலவற்றிலும் இதுபோன்ற விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டுள்ளது.