/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகையிலைப் பொருட்கள் அரசு பஸ்சில் பறிமுதல்
/
புகையிலைப் பொருட்கள் அரசு பஸ்சில் பறிமுதல்
ADDED : ஏப் 26, 2025 11:48 PM
திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட்டில், நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.ஓசூரிலிருந்து திருப்பூர் வந்த ஒரு அரசு பஸ்சில் சோதனை செய்தனர். பஸ்சினுள் இருந்த ஒரு மூட்டையை சந்தேகத்தின் பேரில், பிரித்து பார்த்தபோது அதில், தடை செய்யப்பட்ட, புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது.
அதைக் கொண்டு வந்த, கொடுவாய் கவுண்டன்புதுாரைச் சேர்ந்த ராஜா, 40, என்பவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் மொத்தமாக புகையிலை பொருட்களை வாங்கி விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 12 கிலோ 400 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இது குறித்து, உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ராஜாவுக்கு அவர்கள் அபராதம் விதித்தனர்.

