ADDED : பிப் 15, 2025 07:36 AM
ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீராக்காத்தம்மன் கோவில், செங் காடு, சேவூர் ரோடு, அவிநாசி. வேதிகார்ச்சனை, மூலமந்திர ேஹாமம், மங்கள திரவியாகுதி, பூர்ணாகுதி, இரண்டாம் கால யாக பூஜை - காலை 9:00 மணி. தீபாராதனை, உபசார வழிபாடு, மகா தீபாராதனை, மூன்றாம் கால யாக பூஜை, அன்னதானம் - மாலை 6:00 மணி.
l ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், மலையம்பாளையம், பல்லடம். விநாயகர் பூஜை, இரண்டாம் காலயாக பூஜை, பூர்ணாகுதி, கோபுரங்களுக்கு விமான கலச ஸ்தாபனம் - காலை 8:30 மணி. பஞ்ச கவ்ய பூஜை, மூன்றாம் காலயாக பூஜை, வேத சிவகாம திருமுறை பாராயணம், விசேஷ உபசார பூஜை - மாலை 5:30 மணி. மூலாலய மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - இரவு 7:30 மணி.
தைப்பூச தேர்த்திருவிழா
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. காலசந்தி - காலை 9:00 மணி. அபிேஷகம் - மதியம் 12:00 மணி, 2:00 மணி. மாலை 5:00 மணி.
l வெற்றி வேலாயுதசுவாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. மஞ்சள் நீர் உற்சவம் - காலை 9:00 மணி.
பொது
பொங்கல் விழா
எட்டாம் ஆண்டு பொங்கல் விழா, பொது விளையாட்டு மைதானம், எஸ்.ஆர்., நகர், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நலச்சங்கம். பெண்களுக்கான கோலப்போட்டி - காலை 6:00 மணி. ஏலோலங்கடி இசைக்குழுவின் கலைநிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
பாராட்டு விழா
நாடார் திருமண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி. பங்கேற்போர்: அவிநாசி பாரத ஸ்டேட் வங்கி முதுநிலை மேலாளர் ரகுபதிராஜா, வட்டார கல்வி அலுவலக முன்னாள் கண்காணிப்பாளர் பவுல் குணசேகரன். ஏற்பாடு: பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பு. காலை 10:00 மணி.
சலுகை விற்பனை
திருவிழா
ஆண்டு விழாவை முன்னிட்டு, பத்து சதவீத தள்ளுபடி, சலுகை விற்பனை திருவிழா, ஸ்ரீ முருகன் மேட்சிங் சென்டர், முனிசிபல் ஆபீஸ் வீதி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
ஆதார் சிறப்பு முகாம்
அவிநாசி ரோட்டரி அரங்கம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: தபால் துறை, ரோட்டரி கிளப் ஆப் அவிநாசி, ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேசன். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

