ADDED : டிச 20, 2024 11:53 PM
n ஆன்மிகம் n
அன்னதான விழா
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், ஆர்.எஸ்.,புரம் முதல் வீதி, பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சபரி சாஸ்தா, சபரி யாத்திரை குழு. கணபதி ஹோமம் - காலை 6:00 மணி. திருவிளக்கு வழிபாடு - மாலை 5:00 மணி. அணைக்காடு மகா மாரியம்மன் கோவிலில் இருந்து திருபாவரணப்பெட்டி புறப்பாடு - மாலை 5:30 மணி. சிறப்பு மகா அபிேஷகம் - மாலை 6:00 மணி. மகா தீபாராதனை - இரவு 7:00 மணி.
ஆண்டு விழா
49வது ஆண்டு விழா, ஸ்ரீ ராஜகணபதி கோவில், ஸ்ரீ சண்முகத்தேவர் முத்தம்மாள் திருமண மண்டபம், சென்னியப்பா நகர், மண்ணரை, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா சபரியாத்திரை குழு. மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி. அன்னதானம் - மதியம் 12:30 மணி. பாரப்பாளையம் பகவதி அம்மன் கோவிலில் இருந்து சுவாமி திருவீதி உலா - மாலை 5:00 மணி.
மண்டல பூஜை விழா
65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. அகண்ட நாம பஜனை - காலை 7:45 மணி.
மார்கழி பூஜை
மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.
n ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி.
n வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மார்கழி சிறப்பு பூஜை - காலை 6:00 மணி.
n பொது n
வினாடி - வினா போட்டி
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி- வினா போட்டி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. மதியம் 2:00 மணி.
விழிப்புணர்வு பயிலரங்கம்
சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கான 'இ காமர்ஸ்' குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம், சைமா ஹால், ஹார்வி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சைமா. காலை, 10:00 மணி.
தியான தினம்
சர்வதேச தியான தினம், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, அக்ரஹாரப்புத்துார், மங்கலம். காலை 10:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை.
பொருட்காட்சி
கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.