n ஆன்மிகம் n
ராப்பத்து உற்சவம்
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். பரமபத வாசல் திறப்பு - மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. இரவு பத்து உற்சவம் - இரவு 8:00 மணி.
விசேஷ பூஜை
ஸ்ரீ ஆவுடைய நாயகி அம்பாள், சமேத ஸ்ரீ சுக்ரீஸ்வர சுவாமி கோவில், எஸ். பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஸ்ரீ முகுந்தாபுரி அம்மனுக்கு விசேஷ ேஹாம அபிேஷக அலங்கார பூஜை, அன்னதானம் - காலை, 10:00 மணி.
பொங்கல் விழா
மாரியம்மன் கோவில், தெற்குப்பா ளையம், நாரணாபுரம், பல்லடம். அம்மை அழைத்தல், கம்பம் நடுதல் - மாலை, 6:00 மணி.
பிரதோஷ வழிபாடு
சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு, கைலாசநாதர் கோவில், அலகுமலை. மாலை 4:00 மணி.
வைகுண்ட ஏகாதசி விழா
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். கூடாரை வெல்லும் உற்சவம் - காலை, 10:00 மணி. திருக்கல்யாணம் - மாலை 6:00 மணி.
n ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில், கோவில்வழி, முத்தணம்பாளையம், திருப்பூர். கூடாரை வல்லி ஆண்டாள் திருமஞ்சனம், அடிசல் பூஜை, விஷ்ணு சகஸ்ரநாமம், தீபாராதனை - அதிகாலை, 4:00 மணி. அலங்கார துவாதசி வழிபாடு - காலை, 6:00 மணி. அன்னதானம் - காலை 7:00 மணி.
n ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கோவில், அவிநாசி. அனுமந்த வாகனத்தில் சுவாமி திருவீதி உலா - காலை, 7:00 மணி.
n ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு பூஜை, - அதிகாலை 5:30 மணி. கூடாரை வெல்லும் சீர்விழா - காலை 6:30 மணி. அன்னதானம் - காலை 7:30 மணி.
திருவெம்பாவை உற்சவம்
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக பெருமான் திருவீதியுலா - காலை, 6:30 மணி.
n ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருப்பூர். திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக பெருமான் திருவீதியுலா - இரவு 7:00 மணி.
n பொது n
கைத்தறி கண்காட்சி
மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமிநகர், திருப்பூர். ஏற்பாடு: கைத்தறித்துறை. காலை 10:00 மணி முதல்.
பொருட்காட்சி
கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா எண்டர்டையின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.