ADDED : ஜன 12, 2025 11:57 PM
n ஆன்மிகம் n
ஆருத்ரா தரிசன விழா
கருணாம்பிகை உடனமர், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிவகாமி அம்மன் உடனமர் நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிேஷகம் - அதிகாலை, 3:00 மணி. மகா தீபாராதனை - காலை 6:00 மணி. நடராஜ பெருமான் திருவீதியுலா, அன்னதானம் - 7:00 மணி.
n ஸ்ரீ ஆவுடைய நாயகி அம்பாள் சமேத, ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். கணபதி பூஜை, 108 கலசம், சங்கு பூஜை, பூர்ணாகுதி - அதிகாலை 4:00 மணி. ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிேஷகம் - காலை 7:30 மணி. அன்னதானம் - காலை 10:00 மணி. மகா தீபாராதனை, சுவாமி திருவீதியுலா - மதியம் 12:00 மணி.
n வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், அய்யம்பாளையம், பல்லடம். அய்யன் குரு பூஜை, திருவாதிரை விழா - காலை 8:00 மணி.
n வாலீஸ்வரர் கோவில், சேவூர். அன்னதானம் - காலை 8:00 மணி. மகா அபிேஷகம் - காலை 10:00 மணி. தீபாராதனை - மதியம் 12:00 மணி. பிச்சாண்டவர், விநாயகர் திருவீதியுலா - மதியம் 1:00 மணி. சக்தி விநாயகர் கோவில் நடராஜ பெருமான் சிவகாமியம்மாள் ஊடல் நிகழ்ச்சி - மாலை 3:30 மணி.
n காமாட்சியம்மன் கோவில், வெள்ளியங்காடு, திருப்பூர். ஆருத்ரா மகா அபிேஷகம் - காலை 6:00 மணி. சீர்தட்டம் எடுத்தல் - 7:15 மணி. திருக்கல்யாண வைபவம் - 9:45 மணி. அம்மையப்பன் திருவீதி உலா - 10:00 மணி. அன்னதானம் - 10:30 மணி.
n காசி விஸ்வநாதர் கோவில், டி.பி.ஏ., காலனி, கொங்கு நகர், திருப்பூர். சிவகாமி சமேத நடராஜருக்கு அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம் - காலை 6:00 மணி.
பவுர்ணமி சிறப்பு பூஜை
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஸ்ரீ புரம், அம்மாபாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். 108 பால்குட ஊர்வலம், திரவிய அபிேஷகம், சிறப்பு அலங்காரம் - மாலை 4:30 மணி.
n மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, அக்ரஹாரப்புத்துார், மங்கலம். பஞ்சபூத நவகிரக தவம் - காலை 11:00 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
சத்திய நாராயண பூஜை
ஷீரடி சாய்பாபா கோவில், காந்திநகர், அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
பொங்கல் விழா
மாரியம்மன் கோவில், தெற்குப்பாளையம், நாரணாபுரம், பல்லடம். விசேஷ பூஜை - காலை 8:00 மணி. காவடியாட்டம் - இரவு 7:00 மணி.
ராபத்து உற்சவம்
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். பரமபத வாசல் திறப்பு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. ராப்பத்து உற்சவம் - இரவு 8:00 மணி.
மார்கழி பூஜை
மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.
n வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மார்கழி சிறப்பு பூஜை - காலை 6:00 மணி.
n அம்சவிநாயகர் கோவில், சேரன் நகர், தாராபுரம் ரோடு, திருப்பூர். அபிேஷக பூஜை - காலை 6:00 மணி. அலங்கார பூஜை - 7:00 மணி.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
பொங்கல் விழா
சுகாதாரம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா, பேரூராட்சி அலுவலக வளாகம், அவிநாசி. காலை 8:00 மணி.
திறப்பு விழா
புதிய தொழிற்சங்க அலுவலக திறப்பு விழா, முத்துசாமி வீதி முதல் குறுக்கு தெரு, ஓடக்காடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நாம் தமிழர் பின்னலாடை மற்றும் நுாற்பாலை தொழிலாளர் சங்கம். காலை9:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
பொருட்காட்சி
கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.
n விளையாட்டு n
கிரிக்கெட் போட்டி
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி 2025 கிரிக்கெட் போட்டி, ஒயர் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானம், காதுகேளாதோர் பள்ளி அருகில், முருகம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். காலை9:00 மணி.