n ஆன்மிகம் n
அன்னதான விழா
விநாயகர் கோவில், மேட்டுப்பாளையம், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை. அன்னதானம் - இரவு 7:00 மணி.
n பொது n
துவக்க விழா
பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் திறப்பு விழா, தலைமை தபால் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் எதிரில், திருப்பூர். ஏற்பாடு:தபால்துறை. காலை 11:00 மணி.
குறைகேட்பு கூட்டம்
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகம், குமரன்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை 10:00 மணி.
சிகிச்சை முகாம்
ஆண்களுக்கான நவீன தழும்பில்லா குடும்ப நல கருத்தடை (வாசக்டமி) சிகிச்சை முகாம், அரசு மருத்துவமனை, பல்லடம். ஏற்பாடு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்ப நலத்துறை. காலை 10:00 மணி.
சிறப்பு முகாம்
சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அலுவலகங்கள். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
பயிற்சிக்கு நேர்காணல்
எலக்ட்ரிக்கல் வயரிங் பயிற்சிக்கான நேர்காணல், கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கனராவங்கி. காலை 10:00 மணி.
புத்தக திருவிழா
21வது புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட். கண்காட்சி நேரம் - காலை 11:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை. ஊத்துக்குளி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சி - மாலை 5:00 மணி. கருத்தரங்கம் - இரவு, 7:00 மணி.
ஆண்டு விழா
31ம் ஆண்டு விழா, அவிநாசி கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி, எம்.நாதம்பாளையம், அவிநாசி. மாலை 3:30 மணி.

