ADDED : ஏப் 04, 2025 03:14 AM
ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாதேஸ்வர சுவாமி, ஸ்ரீ முருகன், ஸ்ரீ கருப்பராயர் கன்னிமார் விமான கோபுர கும்பாபிேஷகம், வடக்கு தோட்டம், கானுார்புதுார், கானுார், அவிநாசி. காலை 9:30 முதல், 10:30 மணி வரை.
தேர்த்திருவிழா
பங்குனி தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. கிராமசாந்தி உற்சவம் - இரவு 7:00 மணி.
பொங்கல் விழா
போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். அபிேஷகம் - காலை 11:00 மணி. குபேரலட்சுமி அலங்காரம் - மாலை 5:00 மணி.
* ஸ்ரீ மாரியம்மன் கோவில், சித்தம்பலம், பல்லடம். கோவில் முன் பொங்கல் வைத்தல், அபிேஷகம், மறுபூஜை - மதியம் 12:00 மணி.
பொது
திறப்பு விழா
'இன்ஜினியர்ஸ் மார்ட்' கட்டுமான பொருட்களுக்கான புதிய கடை திறப்பு விழா, வேலாயுதம்பாளையம், ஜூனியர் குப்பண்ணா ரெஸ்டாரான்ட் எதிரில், சேலம் - கொச்சி சாலை, அவிநாசி. பங்கேற்பு: ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியம். காலை 9:30 முதல் 10:30 மணி வரை.
பிறந்த நாள் விழா
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., ஏ.பி.டி., ரோடு - மாலை 6:00 மணி. பெரியதோட்டம் - இரவு 7:00 மணி.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.

