ADDED : ஜூன் 06, 2025 06:20 AM
ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். விநாயகர் வழிபாடு, ஆறாம் கால யாக பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி - அதிகாலை 4:00 மணி. யாத்ரா தானம், கடம்புறப்பாடு - அதிகாலை 5:00 மணி. ஸ்ரீ ராஜகோபுர மகா கும்பாபிேஷகம் - அதிகாலை 5:30 மணி. அன்னதானம் - காலை 6:00 மணி. மகா அபிேஷகம், தசதானம், தசதரிசனம், கோ பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை 6:00 மணி. அம்மன் திருவீதி உலா புறப்படுதல் - மாலை 6:00 மணி.
சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திராநகர், முருங்கப்பாளையம், குமார்நகர், திருப்பூர். மங்கள இசை, விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, விக்ரஹங்களுக்கு காப்பு அணிவித்தல், நாடி சந்தானம், ஸ்பர்சாஹூதி - அதிகாலை 5:00 மணி. திரவ்யாஹூதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை - 7:30 மணி. கலசங்கள் புறப்பாடு - 7:45 மணி. மகா கும்பாபிேஷகம் - காலை 8:00 மணி. மகா அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - 8:30 மணி. அன்னதானம் - 9:00 மணி.
ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. ஆறாம் கால யாக பூஜை, நாடி சந்தானம் - அதிகாலை 4:00 மணி. மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு - காலை 7:00 மணி. மூலவர் விமானங்கள் கும்பாபிேஷகம் - 7:35 மணி. அன்னதானம் - 8:00 மணி. மகா அபிேஷகம், தசதானம், தசதரிசனம் - காலை 11:00 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:15 மணி.
ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கருப்பண்ண சாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், பாண்டியன் நகர் கிழக்கு, பி.என்., ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. திரைப்பட பக்தி மெல்லிசை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோவில், மயில்ரங்கம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில். விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், பிம்பசுத்தி, நான்காம் கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, மகா பூர்ணாகுதி, - அதிகாலை 3:15 மணி. யாக சாலையில் இருந்து கலசங்கள் பிரவேசம் - அதிகாலை 5:15 மணி. ஸ்ரீ மாரியம்மன் மகா கும்பாபிேஷகம், மகா அபி ேஷகம் - அதிகாலை 5:15 மணி. அன்னதானம் - காலை 6:00 மணி.
தேர்த்திருவிழா
ஸ்ரீ விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - காலை 10:00 மணி. அதிகார நந்தி வாகனம், யாழி வாகனம், கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா - மாலை 6:30 மணி. 'கம்பன் காவியத்தில் பெரிதும் மெய் சிலிர்க்க வைக்கும் உறவு? கணவன் மனைவியே, அண்ணன் தம்பியே' எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் - மாலை 6:00 மணி.
பஞ்ச மூர்த்தி நாயன்மார் திருவீதி உலா
குலாலர் பிள்ளையார் கோவில், பெருமாள் கோவில் அருகில், திருப்பூர். ஏற்பாடு: கொங்கு குலால உடையார் அறக்கட்டளை. 63 நாயன்மார்கள், உற்சவ மூர்த்திகளுக்கு கண் திறப்பு, ஆவாகன சிறப்பு பூஜை - இரவு 7:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன், ஜீவா நகர், கே.வி.ஆர்., லே-அவுட், திருப்பூர். காப்பு கட்டுதல் - காலை 6:00 மணி.
குண்டம் திருவிழா
மாகாளியம்மன் கோவில், வெள்ளகோவில். மறுபூஜை - காலை 9:00 மணி.
பொது
நகை விற்பனை கண்காட்சி
வசுந்தரா - நகை விற்பனை கண்காட்சி, பார்ச்சூன் பார்க், 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை.
யோகா பயிற்சி
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:00 முதல் 7:00 மணி வரை.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
இலவச காது பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.