ADDED : ஜூலை 14, 2025 11:54 PM
n ஆன்மிகம் n
தேர்த்திருவிழா
விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ரமணியசுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். விடையாற்றி உற்சவம் - மாலை 6:00 மணி.
தொடர் சொற்பொழிவு
'பாம்பன் குமர குருதாச சுவாமிகள் அருளிய பொன்மயிற்கண்ணி,' எனும் தலைப்பில் ஆன்மிக சொற் பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: பூர்ணிமாதேவி. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
n பொது n
துவக்க விழா
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் துவக்க விழா, ஜெகா கார்டன், திருப்பூர். தாராபுரம் - வாசவி மஹால், கன்னிவாடி - ஒன்றிய துவக்கப்பள்ளி, கணியாம்பூண்டி - எஸ்.கே.எம்., மஹால், மூலனுார் - எஸ்.ஜே.எம்., மஹால், ஊத்துக்குளி - நாச்சியம்மன் செங்குந்தர் திருமண மண்டபம், தேவனாம்பாளைம். காலை 10:00 மணி.
முப்பெரும் விழா
கல்வி வளர்ச்சி நாள் விழா, உயர் தொழில்நுட்ப கணிணி ஆய்வக துவக்க விழா, மாணவர் பொறுப்பு ஏற்பு விழா, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அம்மாபாளையம். காலை10:00 மணி.
செயற்கை அவயம்
வழங்கும் விழா
குமரன் ரோட்டரி சங்க அரங்கம், வீனஸ் கார்டன், மங்கலம் ரோடு, திருப் பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு. மாலை 6:00 மணி.
l எஸ்.பி., டெக்ஸ் நிறுவன வளாகம், தென்னம்பாளையம் கிழக்கு, திருப்பூர். ஏற்பாடு: சிகரம் பவுண்டேசன். காலை 11:00 மணி.
சந்திப்பு கூட்டம்
அவிநாசி தொகுதி சமூக ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு கூட்டம், டூ டி ரெஸ்டாரண்ட், திருப்பூர் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: கோவை பா.ஜ., வடக்கு மாவட்டம். பங்கேற்பு: மத்திய இணை அமைச்சர் முருகன். மாலை 4:15 முதல் 5:45 மணி வரை.
போராட்டம்
நீர், காற்று, மண்ணை மாநகராட்சி மாசுபடுத்துவதாக கூறி, பூச்செடி பரிசாக கொடுக்கும் போராட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். ஏற்பாடு: குடியிருப்போர் நலச்சங்கங்கள், அனைத்து வியாபாரிகள் சங்கம். காலை 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி அலுவலகம் எதிரில், திருப்பூர். ஏற்பாடு: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி. காலை 10:00 மணி.
பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா, விநாயகர் கோவில் மண்டபம், செஞ்சேரிமலை, பல்லடம். ஏற்பாடு: காமராஜர் நற்பணி மன்றம்.
இலவச காதுபரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
n விளையாட்டு n
த்ரோபால் போட்டி
திருப்பூர் சகோதயா த்ரோபால் போட்டி, கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ., பள்ளி, விஜயாபுரம், திருப்பூர். காலை 10:00 மணி.
சதுரங்க போட்டி
வடக்கு குறுமைய மாணவ, மாணவியர் சதுரங்க போட்டி, பிஷப் உபகாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 9:30 மணி.