UPDATED : ஆக 13, 2026 06:04 PM
ADDED : ஆக 13, 2026 06:02 PM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை
ஐந்தாம் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை, ஸ்ரீ அமிர்தவர்ஷினி தாயார் மற்றும் ஸ்ரீ ருக்மாயி சமேத பாண்டுரங்கன், ஸ்ரீ ராஜவிநாயகர் கோவில், ராயபுரம், திருப்பூர். சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் - காலை 9:00 மணி. ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு அபிேஷகம் - 10:30 மணி. திருவிளக்கு பூஜை - 11:00 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:30 மணி. அன்னதானம் - மதியம் 1:00 மணி.
ஆடிப்பூர விழா
* ஸ்ரீ பூமி நீளாதேவி சமேத, ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், ஸ்ரீ அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு திருமஞ்சனம் - காலை 6:30 மணி. திருக்கல்யாண உற்சவம் - மாலை 5:00 மணி.
* ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர் திருப்பதி கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார், ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் - காலை 10:30 மணி. சுவாமி புறப்பாடு, ஊஞ்சல் உற்சவம் - இரவு 7:00 மணி.
* ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். அபிேஷக பூஜை - காலை 10:00 மணி. அலங்கார பூஜை, மகா தீபாராதனை, அன்னதானம் - மதியம் 12:00 மணி.
* ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருவண்ணாமலை கிரிவல பக்தர்கள் குழு. அன்னதானம் - காலை 9:00 மணி.
* காமாட்சியம்மன் கோவில், செங்காடு, அவிநாசி. சிறப்பு அபிேஷகம் - மாலை 4:30 மணி. வளையல், பூ மாலை சிறப்பு அலங்காரம் - மாலை 5:00 மணி.
* ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஆண்டாள் சிறப்பு திருமஞ்சனம் - காலை 10:00 மணி.
* கைலாசநாதர் கோவில், அலகுமலை. பெரிய நாயகி தாயாருக்கு சிறப்பு வளையல் அலங்காரம், மகா தீபாராதனை, ஆடிப்பூர திருவிளக்கு பூஜை - மாலை 5:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. ஏற்பாடு: ஸ்ரீ வாரி டிரஸ்ட், திருப்பூர். ஆண்டாள் அருளிய கோவிந்தன் நாமம் எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, சொற்பொழிவாளர் - திருச்சி கல்யாணராமன் - மாலை 6:30 மணி.
ஆடித்திருவிழா
அழகு நாச்சியம்மன், ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில், சேவூர். அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் புறப்படுதல் - காலை 8:00 மணி. அபிேஷகம் - 10:00 மணி. சித்தர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் தீபாராதனை - 11:30 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி. அன்னதானம் - 12:30 மணி.
திருவிளக்கு பூஜை
16ம் ஆண்டு ஆடி வெள்ளி திருவிளக்கு வழிபாடு, ஸ்ரீ கன்னியம்மன் கருப்பண்ணசாமி கோவில், பெரிய இல்லியம், காங்கயம். மகா கணபதி பூஜை, அபிேஷகம், சிறப்பு அலங்காரம் - காலை 9:00 மணி. திருவிளக்கு பூஜை - காலை 11:00 மணி. மகா தீபாராதனை - மதியம் 1:00 மணி.
கம்பத்தாட்ட நிகழ்ச்சி
ஸ்ரீ கொண்டத்து காளியம்மன் கோவில், பெருமாநல்லுார். ஏற்பாடு: பவளக்கொடி கும்மி கலைக்குழு அறக்கட்டளை. மாலை 6:00 மணி.
பொது
சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ ஆலோசனை மற்றும் சிறப்பு முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. காலை 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்
பயிர்க்கடனை முழுமையாத தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன், ரயில்வே ஸ்டேஷன் அருகில், திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க. பங்கேற்பு: முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா. காலை 9:30 மணி.
நடைபயணம் துவக்கம்
சிறுகுறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி நடைபயணம், எம்.எஸ். நகர், 60 அடி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இந்திய கம்யூ. கட்சி. மாலை 4:30 மணி.
சிறப்பு முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹியரிங் எய்ட் சென்டர், ஜே.கே. டவர்ஸ், பார்க்ரோடு, பின்னிகாம்பவுண்ட் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
விளையாட்டு
மாவட்ட ஜூடோ
மாவட்ட மாணவியர் ஜூடோ போட்டி, எஸ்.டி.ஏ.டி. மாவட்ட உள்விளையாட்டு அரங்கம், சிக்கண்ணா கல்லுாரி வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.
