தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இனிதாக பகுதி: திருப்பூர் மாவட்டம்

இனிதாக பகுதி: திருப்பூர் மாவட்டம்

இனிதாக பகுதி: திருப்பூர் மாவட்டம்


UPDATED : செப் 26, 2026 09:18 PM

ADDED : செப் 26, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2026 09:18 PM ADDED : செப் 26, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பன்னிரு திருமுறை முற்றோதுதல்

திருஞான சம்பந்தர் அருளிச் செய்த இரண்டாம் திருமுறை, பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர், சைவ சித்தாந்த சபை. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

பயிற்சி வகுப்பு

சைவ சமய பயிற்சி வகுப்பு, குமரகுருப நுாலகம், மாணிக்கவாசகர் தமிழரங்க வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

சிறப்பு சொற்பொழிவு

'ஸ்ரீ வேங்கடேசனின் 108' எனும் தலைப்பில், 108 திருநாமங்களின் விளக்கம், புரட்டாசி மாத சிறப்பு உபன்யாஸம், காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். நிகழ்த்துபவர்: வேளுக்குடி கிருஷ்ணன். மாலை 6:30 மணி.

* 'நில் கவனி செல் (சொல்)' எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு, அறிவுத்திருக்கோவில், அக்ரஹாரப்புத்துார், மங்கலம். மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை.

திருவாசகம் முற்றோதல்

ஆதிசிவனார் கோவில், தாராபுரம். ஏற்பாடு: பரமனையே பாடுவோர் சிவனடியார் திருக்கூட்டம். காலை 8:30 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ சேற்று மாரியம்மன் கோவில், தெக்கலுார், அவிநாசி. பூவோடு எடுத்தல் - காலை 6:30 மணி. கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 8:30 மணி.

பொது

பண்பு பயிற்சி முகாம்

கல்லுாரி மாணவியருக்கான பண்பு பயிற்சி முகாம், சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சேவாபாரதி தென்தமிழ்நாடு திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

தேர்தல் பிரசாரம்

தாராபுரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பிரசாரம், கன்னிவாடி, மூலனுார், குளத்துப்பாளையம், உப்புத்துறைப்பாளையம் - மாலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை.

தயாரிப்பு கண்காட்சி

மின் உபயோக பொருட்கள் தயாரிப்பு கண்காட்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: கோவை ஆல்மோனார்ட். காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

பொதுக்குழு கூட்டம்

அடிகளார் அரங்கம், வனாலயம், பல்லடம். ஏற்பாடு: உலக தென்னை உற்பத்தியாளர் நிறுவனம். காலை 10:00 மணி.

ரத்ததான முகாம்

கொங்கு கலையரங்கம், சேவூர்ரோடு, அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி அட்சய பாத்திரம், கொங்கு வேளாளர் அறக்கட்டளை. காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.

மாநில மாநாடு

கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தும் மாநில மாநாடு, சாய் மஹால், பல்லடம். ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். காலை 9:00 மணி.

விளையாட்டு

மூத்தோர் தடகளம்

30 - 70 வயது வரையுள்ள மூத்தோர் பங்கேற்கும் தடகள போட்டி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ், வெட்டரன்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் திருப்பூர். காலை 8:00 மணி முதல்.

சதுரங்க போட்டி

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளி, அவிநாசி. காலை 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us