ADDED : டிச 12, 2024 11:58 PM
n ஆன்மிகம் n
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ சீரடி சாய் பீடம், யுனிவர்சல் ரோடு, வாலிபாளையம், திருப்பூர். விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கணபதி வேள்வி, நவக்கோள் வழிபாடு, திசைக்காவலர் வழிபாடு, பிரவேச பலி, பூர்ணாகுதி, தீபாராதனை - காலை 9:00 மணி. முளைப்பாலிகை வழிபாடு, திருவருட் சக்திகளை திருக்குடங்களில் ஏற்றல், வேள்வி பூஜை, முதல்கால வேள்வி நிறை வேள்வி - மாலை 5:00 மணி. ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி குழுவினரின் பஜன் - மாலை 6:00 மணி.
n ஸ்ரீ சாய்பாபா கும்பாபி ேஷக விழா, திருமுருகன் பூண்டி. ஏற்பாடு: ஸ்ரீ ஐயப்பா சேவா அறக்கட்டளை. கணபதி ேஹாமம், ஐயப்பன், ஸ்ரீ சாய்பாபா பிரதிஷ்டை - அதிகாலை 5:00 மணி. கும்பாபிேஷக விழா - காலை 9:00 - 10:00 மணி வரை.
கார்த்திகை சிறப்பு பூஜை
காசி விஸ்வநாதர் கோவில், டி.பி.ஏ., காலனி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். கிருத்திகை பூஜை - மாலை 3:30 மணி. பிரதோஷ பூஜை, அலங்காரம், கார்த்திகை தீபம் ஏற்றுத்தல் - மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பிறந்த நாள் விழா சிறப்பு பூஜை, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு, சுவரன்மாறன் கல்வி அறக்கட்டளை. காலை 9:00 மணி.
மண்டல பூஜை விழா
65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. திருவிளக்கு பூஜை - மாலை 6:45 மணி.
n பொது n
சிறப்பு மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
பிறந்த நாள் விழா
அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் பிறந்த நாள் விழா, ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.ம.மு.க., பழனியாண்டர் கோவில், பொம்மநாயக்கன்பாளையம், சிறப்பு வழிபாடு - காலை 7:00 மணி. அன்னதானம் - காலை 8:00 மணி. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ரத்ததான முகாம் - காலை 9:00 மணி.
பொருட்காட்சி
கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.