/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று அவிநாசிலிங்கேஸ்வரர் தேரோட்டம்!
/
இன்று அவிநாசிலிங்கேஸ்வரர் தேரோட்டம்!
ADDED : மே 08, 2025 01:17 AM

அவிநாசி; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேரோட்டம் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா தேரோட்டம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
அவிநாசியப்பர் பெரிய தேரோட்டம் இன்று காலை 9:00 மணிக்கு துவங்கி நடைபெறுகிறது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடிக்க உள்ளனர்.
அன்னதானம்
தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் சார்பில், அன்னதானம் வழங்கப்படுகிறது.
தேரோட்டம் நடக்கும் மூன்று நாளிலும், கோவில் நிர்வாகம், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை சார்பில் கோவிலில் உள்ள அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, காந்திபுரத்திலுள்ள தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டபத்தில், தேவேந்திர குல வேளாளர் அறக்கட்டளை சார்பில், மூன்று நாட்கள் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதுதவிர, அவிநாசிலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி சார்பில் பூவாசாமி கவுண்டர் திருமண மண்டபம், ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரர் அன்னதான குழுவினர் சார்பில் தேவாங்கர் திருமண மண்டபம், ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அன்னதான குழு சார்பில் செங்குந்தர் திருமண மண்டபம்.
திருநீலகண்ட நாயனார் அன்னதான குழு சார்பில் குலாலர் திருமண மண்டபம், ஸ்ரீ கருணாம்பிகை அன்னதான குழு சார்பில் கங்கவர் திருமண மண்டபம், கோவம்சத்தார் அன்னதான அறக்கட்டளை சார்பில் கோவம்ச திருமண மண்டபத்தில், இன்று காலை, 9:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது.
நாளை, 2ம் நாள் பெரிய தேரோட்ட நாளில், ஸ்ரீ கருணாம்பிகை அன்னதான குழு சார்பில் கங்கவர் திருமண மண்டபம், ஸ்ரீ அவிநாசியப்பர் அன்னதான குழுவினர் சார்பில் தேவாங்கர் திருமண மண்டபம் ஆகியவற்றில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
10ம் தேதி அம்மன் தேர் வடம் பிடிக்கும் நாளில், ஸ்ரீ கருணாம்பிகை அன்னதான குழு சார்பில் கங்கவர் திருமண மண்டபம், அறிவுச்சுடர் அறக்கட்டளை சார்பில் செங்குந்தர் திருமண மண்டபம், சிவசக்தி அன்னதான குழு சார்பில் தேவாங்க செட்டியார் திருமண மண்டபத்திலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது.

