/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று பொழுது புலர்ந்தது தை மாசம்... பொங்கல் கமழ்ந்தது நெய் வாசம்
/
இன்று பொழுது புலர்ந்தது தை மாசம்... பொங்கல் கமழ்ந்தது நெய் வாசம்
இன்று பொழுது புலர்ந்தது தை மாசம்... பொங்கல் கமழ்ந்தது நெய் வாசம்
இன்று பொழுது புலர்ந்தது தை மாசம்... பொங்கல் கமழ்ந்தது நெய் வாசம்
ADDED : ஜன 15, 2024 12:38 AM

ஆடியில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் காலம் தை மாதம். இன்று தை மாதம் பிறந்தது.
இன்று (15ம் தேதி) அதிகாலை, வீட்டுவாசலில், மஞ்சள் கொம்பு கட்டிய பானையில், பச்சரிசி, பாசிப்பருப்பு, பால் கலந்து பொங்கலிடுவர்; தொடர்ந்து, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்ந்து, 'கமகம' சர்க்கரை பொங்கல் தயாரித்து, தலைவாழை இலையில் படைத்து சூரியனை வழிபட உள்ளனர்.
திருப்பூர் நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில், பொங்கல் விழா மற்றும் இளைஞர், இளம்பெண்கள், சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில்களில், அதிகாலையில் பொங்கல் வைத்து, சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையும் நடக்க உள்ளது.
பொங்கல் விழா இன்றுதான் என்றாலும், பல்வேறு இடங்களிலும் கடந்த ஒரு வாரமாகவே பொங்கல் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
திருப்பூர், சபாபதிபுரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் மாநகர போலீஸ் சார்பில், பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடை அணிந்து போலீசார் புதுப்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, தன் மனைவியுடன் பங்கேற்றார்.
போலீஸ் குடியிருப்பை சேர்ந்த பெண்கள், மகளிர் போலீசார் ஆகியோருக்கு இடையிலான கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. உறியடித்தல் போட்டியில் கமிஷனர், அவரது மனைவியும் பங்கேற்றனர். பல்வேறு விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பொங்கல் விளையாட்டு விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் பரிசளித்ததார்.
மஞ்சள் மணக்க
வாழ்வு மலரும்
கரும்பு இனிக்க
கவலைகள் மறையும்
மாக்கோலம் பளபளக்க
மாபெரும் வெற்றி கிட்டும்
பொங்கல் இனிக்க
பூரிப்பு பெருகும்
ஞாயிறு வரவு
ஞானச் சிறப்பு!