ADDED : பிப் 16, 2025 11:47 PM
n ஆன்மிகம் n
குண்டம் திருவிழா
80வது நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காள பரமேஸ்வரி கோவில், அவிநாசி. அபிேஷகம் - மாலை 6:00 மணி. நந்தா தீபம் ஆரோகணம் - இரவு 9:00 மணி.
திருப்பணி துவக்க விழா
ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கரட்டாங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். புதிய கற்கோவில் அமைக்கும் பணிக்கான திருப்பணி துவக்க விழா - காலை 9:00 முதல் 10:30 மணி வரை.
தைப்பூச தேர்த்திருவிழா
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. காலசந்தி - காலை 9:00 மணி. மகா தரிசனம் - 9:30 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி, மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
மண்டல பூஜை
சக்திவிநாயகர், ராக்காத்தம்மன் கோவில், செங்காடு, சேவூர் ரோடு, அவிநாசி. காலை 7:00 மணி.
n ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், மலையம்பாளையம், பல்லடம். காலை 7:00 மணி.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
தேசிய கருத்தரங்கம்
'வளர்ந்து வரும் ஏ.ஐ., தொழில்நுட்பம்' எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம், பொன்விழா அரங்கம், செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரி, காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வணிக நிர்வாகவியல் துறை. காலை 11:00 மணி.
பதவியேற்பு விழா
2025 - 2026 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, ஐ.சி.ஏ.ஐ., பவன், பெத்திச்செட்டிபுரம் முதல்வீதி, ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா திருப்பூர் கிளை. கருத்தரங்கம்- மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.
மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, ஈ.வெ.ரா., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, ரயில்வே ஸ்டேஷன் முன்புறம், திருப்பூர். ஏற்பாடு: கிழக்கு மாவட்ட தி.மு.க., காலை 8:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.

