/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளி, வெங்காயம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அவசிய தேவை
/
தக்காளி, வெங்காயம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அவசிய தேவை
தக்காளி, வெங்காயம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அவசிய தேவை
தக்காளி, வெங்காயம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அவசிய தேவை
ADDED : மார் 21, 2025 10:10 PM
-- நமது நிருபர் -
தக்காளி, வெங்காயம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை துவங்கி, தமிழக அரசே, விவசாயிகளிடம் இவற்றை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பல்லடம் - மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கார்த்தி கூறியதாவது:
நான், எம்.பி.ஏ., படித்துள்ளேன். விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, இத்தொழிலை செய்து வருகிறேன். விளை பொருட்களுக்கு ஆதார விலை கிடைப்பதில்லை என்பதுதான் பெரும் பிரச்னை. நல்ல விலைக்கு விற்பனையாகி வந்ததால், இரண்டு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்தேன்.
அறுவடைக்கு வந்த நிலையில், விலை, கிலோ, 10 ரூபாய்க்கும் குறைவாக சரிந்து, கூலிக்கும் கட்டுப்படியாகாமல் போனது.
இதனால், நன்றாக உள்ள சில தக்காளிகளை மட்டும் பறித்து விட்டு, மீதமுள்ளவற்றை செடிகளுடன் பறித்து ரோட்டில் வீசவேண்டிய சூழல் ஏற்பட்டது. நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், அதிக சாகுபடி செய்யப்பட்டதும், வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தக்காளிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதும், நமது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க, விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.
தக்காளி, வெங்காயம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை துவங்கி, தமிழக அரசே, விவசாயிகளிடம் இவற்றை கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.