ADDED : அக் 13, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், தெற்கு உழவர் சந்தைக்கு, 15 முதல், 18 டன் தக்காளி வரும். மழை காரணமாகநேற்று, 12 டன் மட்டும் வந்தது.
மூன்றாம் தரம், 27 ரூபாய் முதல், 30 ரூபாய்; முதல் தரம், 32 முதல், 35 ரூபாய்க்கு விற்றது. மொத்த விலையில், 14 கிலோ எடை கொண்ட கூடை, 450 முதல், 50 ரூபாய். 26 கிலோ எடை கொண்ட பெரிய கூடை, 850 முதல், ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.
திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில், ஒரு கிலோ தக்காளி, 40 முதல், 45 ரூபாய்க்கு விற்றது. வழக்கமாக, நான்கு முதல், ஐந்து டன் தக்காளி வரும்; நேற்று, 2.75 டன் தக்காளி மட்டுமே வரத்தாக இருந்தது.
அதேசமயம் வெளிமார்க்கெட்டில் ஒருகிலோ, 60 ரூபாய். 14 கிலோ, 800 ரூபாய், 26 கிலோ, 1,550 ரூபாய்க்கு விற்கப்பட்டது.