ADDED : டிச 13, 2025 07:12 AM
திருப்பூர்: திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைகளில் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், தக்காளி விலை கிலோ, 22 ரூபாயானது.
கத்தரி பத்து ரூபாய்; வெண்டை 20 ரூபாய் உயர்ந்துள்ளது. வரத்து குறைவால் அவரை விலை, 90 ரூபாயை எட்டி பிடித்தது. கடந்த வாரத்தை விட பீர்க்கன், பாகற்காய் விலை, பத்து ரூபாய் குறைந்துள்ளது.
குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், மலை காய்கறிகள் வரத்து சற்று குறைந்துள்ளது. வரத்து உயர்வால் இஞ்சி 60 ரூபாய், மல்லித்தழை, 40, கறிவேப்பிலை, 40 ரூபாய் என விலை குறைந்துள்ளது.
திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் நேற்றைய விலை (கிலோ):
கத்தரி - 70 ரூபாய், வெண்டை - 70, மிளகாய் - 50, புடலங்காய் - 50, அவரை - 90, கொத்தவரை - 40, பீர்க்கன் - 60, சுரைக்காய் - 15, பாகற்காய் - 60, முள்ளங்கி - 30, வாழைக்காய் - 25, சேனை - 40, மரவள்ளி - 25, எலுமிச்சை - 80, சின்ன வெங்காயம் - 50, பெரிய வெங்காயம் - 25, உருளை - 60, முட்டைக்கோஸ் - 30, கேரட் - 60, பீட்ருட் - 50, பீன்ஸ் - 80, காலிபிளவர் - 40, மேராக்காய் - 20, இஞ்சி - 60 ரூபாய்.
முருங்கை இல்லை: திருப்பூர் வடக்கு, தெற்கு உழவர் சந்தைகளுக்கு மருந்துக்கு கூட முருங்கை வரத்து இல்லை. வெளி மார்க்கெட்டில் முருங்கை கட்டு, 250 - 300, ஒரு காய், 15- 20 ரூபாய்க்கு விற்பனையானது.

