/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளி விலை உயரும்; விவசாயிகள் நம்பிக்கை
/
தக்காளி விலை உயரும்; விவசாயிகள் நம்பிக்கை
ADDED : ஆக 30, 2025 01:04 AM
பொங்கலுார்; வைகாசி பட்டத்தில் நடவு செய்த தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குவதால் வெளியூர் வரத்து சரிந்துள்ளது.
உள்ளூரில் தக்காளி விளைச்சல் நன்றாக இருந்த போதிலும் முகூர்த்த சீசன் என்பதால் சில நாட்களாக தக்காளிக்கு நல்ல கிராக்கி நிலவியது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 600  ரூபாய்க்கு விற்றது. தற்போது திடீரென விலை பாதியாக குறைந்து, 300 ரூபாய்க்கு விற்கிறது.
விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாள் என்பதால் பெரும்பாலான நிறுவனங்கள், கடைகள் விடுமுறை விடப்பட்டிருந்தது. பொதுமக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். வரும் நாட்களில் இயல்பு நிலை திரும்பி தக்காளிக்கான தேவை உயரும். அப்போது விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

