UPDATED : ஆக 27, 2026 06:30 PM
ADDED : ஆக 27, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
உடுமலை: ரேஷன் கார்டுகளில், உறுப்பினர்கள், கைரேகை பதிவு செய்து கொள்ள, நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், ரேஷன் கார்டுகளிலுள்ள குடும்ப உறுப்பினர்கள், கைரேகை (இ-கே.ஒய்.சி.,) பதிவுகள் மேற்கொள்ள, கடந்த, 2 மற்றும் 8ம் தேதிகளில், அனைத்து ரேஷன் கார்டுகளில், விற்பனை முனைய இயந்திரம் வாயிலாக, விரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே நடந்த முகாம்களில், பதிவுகளை மேற்கொள்ளாத ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், விரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பின் வாயிலாக மேற்கொள்ள, நாளை (29ம் தேதி) அனைத்து ரேஷன் கடைகளிலும், சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
