/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளைய இல்லத்தரசிகள் நலமுடன் இருப்பது அவசியம்! கருத்தரங்கில் கல்லுாரி மாணவியருக்கு 'அட்வைஸ்'
/
நாளைய இல்லத்தரசிகள் நலமுடன் இருப்பது அவசியம்! கருத்தரங்கில் கல்லுாரி மாணவியருக்கு 'அட்வைஸ்'
நாளைய இல்லத்தரசிகள் நலமுடன் இருப்பது அவசியம்! கருத்தரங்கில் கல்லுாரி மாணவியருக்கு 'அட்வைஸ்'
நாளைய இல்லத்தரசிகள் நலமுடன் இருப்பது அவசியம்! கருத்தரங்கில் கல்லுாரி மாணவியருக்கு 'அட்வைஸ்'
ADDED : செப் 27, 2024 11:36 PM

திருப்பூர்: திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், 'போஷன் மா 2024' எனும் தலைப்பில் குழந்தைகள், வளர்இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சவுமியா முன்னிலை வகித்தார்.
'தற்போதைய உணவூட்டல் முறைகளும் ஊட்டச்சத்து குறைபாடும்' எனும் தலைப்பில், கல்லுாரி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துவியல் துறைத்தலைவர் சுபா, 'வளர்இளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு' எனும் தலைப்பில், மாநகராட்சி நகர்நல அலுவலர் கவுரி சரவணன் பேசினர்.
தேசிய குழந்தைகள் நலத்திட்டக்குழு, மாநகராட்சி மருத்துவ அலுவலர் இலக்கியா பேசியதாவது: வளரிளம் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு ரத்தசோகை (ரத்தம் குறைபாடு) பெரும் சவாலாக உள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்களுக்கான சத்தான உணவுகளை உட்கொள்ளாததால், திருமணமான பின், கர்ப்பிணியாகும் போது, குழந்தை பிறப்பின் போது போதிய ரத்தம் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
நீங்கள் (மாணவியர்) நாளைய இல்லத்தரசியாக, தாய், மனைவியாக இருந்து குடும்பத்தை கட்டமைக்க போகிறீர்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும். போதிய ரத்தம் உடலுக்கு கிடைக்க, முருங்கை கீரை, முருங்கை ஜூஸ், அத்திப்பழம், மாதுளம்பழம், பீட்ரூட் உள்ளிட்ட சத்தான உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
தினசரி உடற்பயிற்சி, வாக்கிங், ஜாக்கிங் செல்லுங்கள். ஆரோக்கியமான, தானிய உணவு முறைகளுக்கு பழகிக்கொண்டால், பின்னாளில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கலாம். குடும்ப தலைவி நன்றாக இருக்க வேண்டும். அப்போது, தான் குடும்பமும் நன்றாக இருக்கும். ஒரு நாட்டின் வாழ்க்கை தரம் அந்நாட்டில் வாழும் குழந்தைகள், தாய்மார்களின் ஆரோக்கியம், இறப்பு விகிதம், உடல் நலனை பொறுத்தே மதிப்பிடப்படுகிறது. ஆரோக்கியமாக வாழ, ஆற்றல் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.