sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அறங்காவலர் குழு அமைக்க ஆமை வேகம்; ஆழ்ந்த உறக்கத்தில் அறநிலையத்துறையினர்

/

அறங்காவலர் குழு அமைக்க ஆமை வேகம்; ஆழ்ந்த உறக்கத்தில் அறநிலையத்துறையினர்

அறங்காவலர் குழு அமைக்க ஆமை வேகம்; ஆழ்ந்த உறக்கத்தில் அறநிலையத்துறையினர்

அறங்காவலர் குழு அமைக்க ஆமை வேகம்; ஆழ்ந்த உறக்கத்தில் அறநிலையத்துறையினர்


ADDED : மார் 14, 2024 12:06 AM

Google News

ADDED : மார் 14, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : பல்லடம் வட்டார கோவில்களில், அறங்காவலர் குழு அமைக்கும் பணி, அரசியல் தலையீடு காரணமாக, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

தமிழகத்தில், ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, சில கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான கோவில்களில் அமைக்கப்படவில்லை.

அவ்வகையில், பல்லடம் வட்டாரத்தில், பொங்காளியம்மன், மாகாளியம்மன், விநாயகர் பாலதண்டாயுதபாணி, அருளானந்த ஈஸ்வரர், காரணப்பெருமாள், மாதப்பூர் முத்துக்குமாரசாமி, அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன.

இக்கோவில்களுக்கு அறங்காவலர் குழு இன்று வரை நியமிக்கப்படவில்லை. அரசியல் தலையீடும், அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து, பக்தர்கள் சிலர் கூறியதாவது:

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்கள் பலவற்றுக்கு, வம்சாவழியாக வந்த பலர் தொடர்ந்து நிதி உதவி, பொருள் உதவி அளித்து, ஆன்மிக ஈடுபாடுடன் கோவில்களை பாதுகாத்து வருகின்றனர். இதுபோன்றவர்களை அறங்காவலர்களாக நியமித்தால் மட்டுமே கோவில்கள் செழிப்படையும்.

ஆனால், அரசியல் தலையீடு காரணமாக, இதுபோன்றவர்கள். ஒதுங்கி செல்கின்றனர். எனவே, அறநிலையத்துறை, தகுதியானவர்களை தேர்வு செய்து அறங்காவலர் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, அறநிலையத்துறை இணை கமிஷனர் குமரதுரையிடம் கேட்டதற்கு, ''அறங்காவலர் குழு நியமிப்பதில் பல்வேறு விதிமுறைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளன. பல விசாரணைகளும் மேற்கொள்ள வேண்டி உள்ளது. இவை நிறைவடைந்ததும் குழு அமைக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us