/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணியர் அனுமதி
/
பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணியர் அனுமதி
ADDED : அக் 17, 2024 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை பஞ்சலிங்கம் அருவியில் நீர் வரத்து சீரானதையடுத்து, சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதியில், கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக, பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டு, அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று பஞ்சலிங்கம் அருவியில், நீர்வரத்து சீரானதோடு, மலைப்பகுதிகளிலும் மழை குறைந்து, வானம் தெளிவாக காணப்பட்டது. இதனையடுத்து, அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர்.