/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
/
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
ADDED : ஜூலை 27, 2025 09:24 PM
உடுமலை; உடுமலை அருகே பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையில், பெய்து வரும் தொடர்மழையால், நேற்று முன்தினம் பஞ்சலிங்க அருவியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தோணியாற்றிலும், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, அமணலிங்கேஸ்வரர் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது.
நேற்றும் பஞ்சலிங்க அருவியில், நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால், சுற்றுலா பயணியர் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தோணியாற்றில் நீர்வரத்து சீரானதால், அமணலிங்கேஸ்வரர் கோவிலில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நீர்வரத்து பாதுகாப்பான நிலையில் இருப்பதால், கோவிலில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அருவி மற்றும் கோவில் பகுதியில், கோவில் பணியாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.