/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்திமலையில் திரண்ட சுற்றுலா பயணியர் 'பார்க்கிங்' வசதி இல்லாமல் தவிப்பு
/
திருமூர்த்திமலையில் திரண்ட சுற்றுலா பயணியர் 'பார்க்கிங்' வசதி இல்லாமல் தவிப்பு
திருமூர்த்திமலையில் திரண்ட சுற்றுலா பயணியர் 'பார்க்கிங்' வசதி இல்லாமல் தவிப்பு
திருமூர்த்திமலையில் திரண்ட சுற்றுலா பயணியர் 'பார்க்கிங்' வசதி இல்லாமல் தவிப்பு
ADDED : ஏப் 28, 2025 04:08 AM

உடுமலை : அமாவாசை வழிபாடு மற்றும் கோடை விடுமுறையையொட்டி, திருமூர்த்திமலையில், மக்கள் திரண்டனர்; 'பார்க்கிங்' வசதி இல்லாததால், பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
உடுமலை அருகே திருமூர்த்திமலையில், மும்மூர்த்திகள் ஒருங்கே அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. அமாவாசையையொட்டி, கோவிலில், நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இப்பூஜைகளில் பங்கேற்று வழிபாடு செய்ய, சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அதிகளவு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று மூம்மூர்த்திகளை தரிசனம் செய்தனர்.
மலைப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில், கோடை காலத்திலும் சீரான நீர் வரத்து உள்ளது. கோடை விடுமுறை காலம் துவங்கியுள்ளதால், பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணியர் நேற்று பஞ்சலிங்க அருவிக்கு வந்து, உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
நெருக்கடியால் திணறல்
கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு, வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மக்கள் வந்த வாகனங்களை நிறுத்த, திருமூர்த்திமலையில் இடவசதியில்லை.
கோவில் அருகே குறுகலான இடத்தில், வாகனங்களை திருப்ப முடியாமல் நெரிசல் ஏற்பட்டது. இதனால், கோவில் அருகில் இருந்து, படகுத்துறை வரை, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
உடுமலையில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள், படகுத்துறையோடு திருப்பி விடப்பட்டது. இதனால், பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர்.
பல மணி நேரம் நெரிசல் நீடித்ததால், சுற்றுலா பயணியர் கடும் அதிருப்தி அடைந்தனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய போலீசாரும் இல்லை. நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.