/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளத்தில் இறங்கிய டிராக்டர்; குழந்தை உட்பட 19 பேர் காயம்
/
பள்ளத்தில் இறங்கிய டிராக்டர்; குழந்தை உட்பட 19 பேர் காயம்
பள்ளத்தில் இறங்கிய டிராக்டர்; குழந்தை உட்பட 19 பேர் காயம்
பள்ளத்தில் இறங்கிய டிராக்டர்; குழந்தை உட்பட 19 பேர் காயம்
ADDED : ஏப் 15, 2025 11:49 PM

பல்லடம்; சுல்தான்பேட்டை அருகே நகர களந்தை கிராமத்தில் உள்ள தனியார் கயிறு மில்லில் இருந்து, தேங்காய் மஞ்சி துகள் ஏற்றிக்கொண்டு, டிராக்டர் ஒன்று, தொழிலாளர்களுடன் செஞ்சேரிபுத்துார் அருகே, வடுகபாளையம் கிராமத்துக்கு புறப்பட்டது.
அப்போது, வளைவான பகுதியில் திரும்பும் போது, டிராக்டருடன் இணைப்பில் இருந்த டிரெய்லர் கழன்றது. இதில், நிலை தடுமாறிய டிராக்டர், ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. டிராக்டரில் இருந்த தொழிலாளர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு, சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அடுத்தடுத்து வந்த ஆம்புலன்ஸ்களில், அனைவரும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில், 5 குழந்தைகள், 9 பெண்கள் உட்பட, 5 ஆண்கள் என, மொத்தம், 19 பேர் காயமடைந்தனர். பலத்த காயமுற்ற சிலர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுல்தான்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.