/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுதேசி தின விழிப்புணர்வு ஊட்டிய தொழிற்சங்கத்தினர்
/
சுதேசி தின விழிப்புணர்வு ஊட்டிய தொழிற்சங்கத்தினர்
ADDED : டிச 12, 2024 11:57 PM

திருப்பூர்; சுதந்திர போராட்ட காலத்தில், காந்தியின் சுதேசி கொள்கையை பின்பற்றும் விதமாக பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டனர். கடந்த 1930ம் ஆண்டு டிச., 12ம் தேதி, மும்பை துறைமுகத்துக்கு வெளிநாட்டிலிருந்து துணிகள் வந்து இறங்கின.
அவற்றை ஏற்றிச் சென்ற லாரியை சுதந்திர போராட்ட வீரர்கள் தடுக்க முயன்றனர்.
இதில், பாபு கேனு என்ற இளைஞர், அந்த லாரியை தடுக்க முயன்ற போது, லாரியை அவர் மீது ஏற்றி கொலை செய்யப்பட்டார்.சுதேசி பொருள் ஆதரவுக்காக பாபு கேனு தன் உயிரை பறி கொடுத்த டிச., 12ம் தேதி, சுதேசி தினம் - பாபு கேனு பலி தானமாக, ஹிந்து அமைப்புகளால் பின்பற்றப்படுகிறது.
இதையொட்டி நேற்று திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு பகுதியில் பி.எம்.எஸ். தொழிற்சங்கம் சார்பில், சுதேசி தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரசாமி தலைமை வகித்தார்.
திருப்பூர் மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன், மாவட்ட செயலாளர்கள் செந்தில், மாதவன், ஆட்டோ சங்க நிர்வாகிகள், அண்ணாதுரை, பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
சுதேசி போராட்டம் மற்றும் சுதேசி தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

